தமிழகத்தின் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை – தேர்விற்கான முழு பாடத்திட்டம்!

0
தமிழகத்தின் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை - தேர்விற்கான முழு பாடத்திட்டம்!
தமிழகத்தின் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை - தேர்விற்கான முழு பாடத்திட்டம்!
தமிழகத்தின் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1500 உதவித்தொகை – தேர்விற்கான முழு பாடத்திட்டம்!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழி குறித்த இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் நடைபெற இருக்கிறது. இது குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

தமிழக பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசு சார்பில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்பட) 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23 கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளில் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1500 உதவித்தொகையாக 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையானது 50 சதவிகிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், 50 சதவிகிதம் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு கேட்கப்படும் வினாத்தாள்கள் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – ஷாக் ரிப்போர்ட்!

Exams Daily Mobile App Download

அதன் படி, 2022-23 கல்வியாண்டில் நடத்தப்பட இருக்கும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். அதில் ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இந்த 100 வினாக்களும் 10 ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இருக்கும். 100 வினாக்களில் இலக்கணம் , அற இலக்கியம் , சங்க இலக்கியம் , தற்கால இலக்கியம் , உரைநடை மற்றும் துணைப்பாடம் ஆகிய தலைப்புகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுத்தல் , பொருத்துக , பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுத்தல் , சரியான / தவறான கூற்றைத் தேர்ந்தெடுத்தல் , கூற்று / காரணம் வினாக்கள் போன்றவை கேட்கப்படும்.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்வானது வருகிற அக். 1 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியின் மூலம் 09.09.2022 ம் தேதியான இன்றைக்குள்  விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த தேர்விற்கு கட்டணமாக ரூ. 50 சேர்த்து தங்களது பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கொடுக்க வேண்டும். இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!