மின்சார இரு சக்கர வாகன ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரமாக அதிகரிப்பு – மத்திய அரசு!
இந்தியாவில் இருசக்கர மின்சார வாகனங்களுக்கான ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார்.
இருசக்கர மின்சார வாகனம்:
இந்தியாவில் மத்திய அரசு மின்சார வாகனங்களை அதிகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கிலும், பெட்ரோல், டீசல் பயன்படுத்துவதை தவிர்க்கவும் பேம் இந்தியா திட்டம் 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்காக மொத்தம் 10,000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. 7090 மின்சார பஸ்கள், 5 லட்சம் 3 சக்கர மின்சார வாகனங்கள், 55,000 மின்சார கார்கள், 10 லட்சம் 2 சக்கர மின்சார வாகனங்களுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளுக்கு ‘இதுதான்’ காரணம் – சுகாதாரத்துறை செயலர்!
இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 19 ஆம் தேதி வரை, நாட்டில் 5,17,322 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொழில்துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜார் தெரிவித்துள்ளார். பேம் இந்தியா திட்டத்தின் கீழ் வாகனங்கள் வாங்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும் அளித்து வருகிறது. இதனால் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
இந்த நிலையில் பேம் 2 திட்டத்தின் கீழ், இரு சக்கர மின்சார வாகனங்களுக்கான ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து, ரூ.15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரி விலையை குறைக்க நவீன பேட்டரி தயாரிப்பு மற்றும் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு அனுமதி, சாலை வரி ஆகியவற்றிலிருந்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் விலக்கு அளித்துள்ளது.