மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு - மாநில அரசு அறிவிப்பு!
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை அதிகரிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

புதுவை மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள உதவித்தொகையை நாளை முதல் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.

உதவித்தொகை:

மாநில அரசு முதியவர்கள்,ஊனமுற்றவர்கள், மாணவ மாணவிகள் என அனைவருக்கும் உதவும் வகையில் உதவித்தொகை வழங்கி வருகிறது. புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் ரங்கசாமி. அவர் முதல்வராக பதவி ஏற்றதும் முதியோர் உதவித்தொகையை ரூ.500 உயர்த்தியும், 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்கவும் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து உயர்த்தப்பட்ட உதவித்தொகை கடந்த மாதம் முதல் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

செப்.11ம் தேதிக்குள் தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும் – நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்க வேண்டும் என தனது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என கூறினார். இவ்வாறு உயர்த்தப்பட்ட தொகை எப்போது வழங்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் கேள்விகள் எழுந்த நிலையில் அமைச்சர் தேனி ஜெயக்குமார் அதற்கான விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் கூறியதாவது, “சமூக நலத்துறை சார்பில் இம்மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட தொகையுடன் கூடிய உதவித்தொகை தரப்படும். 40 முதல் 65 சதவீதம் வரை ஊனம் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.1500 உதவித்தொகை, இரண்டாயிரமாகவும், 66 முதல் 85 சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு இரண்டாயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், 86 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.

ICC Test தரவரிசை பட்டியல் – டாப் 10 வரிசையில் பும்ரா & தாகூர் முன்னேற்றம்!

அதே போல் நிரந்தர ஊனம் 60 முதல் 79 சதவீதம் வரை உள்ளவர்களுக்கு உதவித்தொகை ரூ.2 ஆயிரத்து 200ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 700 ஆகவும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு நிரந்தர ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 300லிருந்து ரூ.3 ஆயிரத்து 800 ஆகவும் உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட தொகையுடன் கூடிய உதவித்தொகை இன்று வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையை நாளை (செப்.9) முதல் பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பெறலாம்” என கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!