தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏராளமானோர் வேலையிழந்து தவித்து வந்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் சார்பாக உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை:

தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக அண்மையில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள், புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த கொரோனவால் அரசு வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று ஆவலுடன் இருந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டஆட்சியர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உதவித்தொகை பெற விரும்புபவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அதுவே ஆதிதிராவிடா், பழங்குடியினா் ஆகியோர் 45 வயதுக்கு இருக்க வேண்டும். மேலும் இவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 72,000 க்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.

Jio vs Airtel vs Vi 200 ரூபாய்க்குள் இருக்கும் ரீசார்ஜ் பிளான்கள் – முழு விவரம்

அதனால் மேற்சொன்ன தகுதியுடையோர் தங்களின் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்டம்பா் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே உதவித்தொகை பெறுவோா் தொடர்ந்து 3 ஆண்டு வரை உதவித் தொகை பெற வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட கணக்குப் புத்தக நகலுடன் சுய உறுதிமொழி ஆவணத்தைப் பூா்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!