தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆகஸ்ட் 31 கடைசி நாள்!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆகஸ்ட் 31 கடைசி நாள்!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த விண்ணப்பங்கள் அனுப்ப ஆகஸ்ட் 31 கடைசி நாள் ஆகும்.

உதவித்தொகை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஆண்டுதோறும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து விட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரசு தரப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த வதந்தி – அதிகாரி விளக்கம்!

தற்போது இத்திட்டத்தின் மூலம் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்ததற்கான கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.200 வழங்கப்படும் எனவும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என பதிவு செய்த நபர்களுக்கு ரூ.400, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.400, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் 1 ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகையை பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படித்த பட்டதாரிகள் பெற முடியாது. இந்த உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்ற வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெற தகுதி உள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே போல ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பங்களை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ, இணையதளம் (www.tnvelaivaaippu.gov.in) வாயிலாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!