மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது அதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை:

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகையினை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏனெனில் பொருளாதார வகையில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி தொடர வேண்டும் என்ற மாணவர்களின் நலன் கருதி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி 2021-22ம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை வழங்க விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்ற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையானது 1 முதல் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அதாவது ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அக்.27ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதற்கான இறுதி முடிவு – மாநில அரசு அறிவிப்பு!

மேலும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை தெரிவித்துள்ளார். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.scholarships.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களும், 11 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அதாவது, ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் பயில்பவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் நவம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 2 ரூபாயில் 365GB டேட்டா! தவறாமல் படிங்க!

தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCTV குறியீட்டு எண்களை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்கள் அறிய வழிகாட்டு நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அங்கு சென்று பார்த்துக் கொள்ளுமாறு விளக்கம் அளித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 8344280895 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here