தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்ள அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

திருமண ஏற்பாடுகளில் களம் இறங்கிய கோபி & ராதிகா – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

மேலும் இந்த உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்க்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதே போல் 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளிட்ட படிப்பை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போல் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிப்பை மேற்கொள்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதே போல் பள்ளி மேற்படிப்புக்கான உதவித்தொகைக்கு அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!