தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை – முதல்வரின் உத்தரவு! வெளியான சூப்பர் தகவல்!

0
தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை - முதல்வரின் உத்தரவு! வெளியான சூப்பர் தகவல்!
தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை - முதல்வரின் உத்தரவு! வெளியான சூப்பர் தகவல்!

தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை – முதல்வரின் உத்தரவு! வெளியான சூப்பர் தகவல்!

தமிழகத்தில் யாருடைய ஆதரவும் இல்லாமல் தவிக்கும் தகுதியுள்ள முதியவர்களுக்கு அரசு சார்பாக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகுதியற்றவர்கள் உதவித்தொகை பெற்று வருவதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை:

தமிழ்நாட்டில் உறவினர்கள் ஆதரவின்றியும் உணவுக்கே வழி இல்லாமல் தவிர்க்கும் முதியவர்களுக்காக அரசு உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 60 வயதை கடந்த ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வருகின்றனர். இந்த உதவித்தொகை பெற விரும்புவோர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களை சமர்பித்து அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். இந்த நிலையில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தகுதியற்ற நபர்கள் இத்திட்டத்தின் உதவித்தொகை பெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

ஆஃபர் லெட்டர்களை திரும்ப பெறும் ஐடி நிறுவனங்கள் – பீதியில் ஊழியர்கள்!!!

இதனையடுத்து திடீரென சிலருக்கு உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது. இதில் தகுதியுடையவர்களும் இடம் பெற்றதாக புகார்கள் எழுந்தது. அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் முறையாக பரிசீலித்து மனுக்களை ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் முதியோர் உதவித்தொகை குறித்து பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கடந்த ஆட்சி காலத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களை ஒவ்வொரு ஆண்டும் குறைத்து வந்ததது வழக்கமாக இருந்தது.

மேலும் ஒரே நேரத்தில் சுமாா் 4000 போ் தகுதியற்றவர்களாக தீர்மானித்து நீக்கப்பட்டனா். அவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தற்போது 2000 பேரை மீண்டும் இத்திட்டத்தில் இணைத்துள்ளோம். இப்போதைக்கு புதிதாக 1 லட்சம் பேரிடம் மனுக்கள் பெறாமல் திட்டத்தில் இருப்போரை மறு ஆய்வு செய்து தகுதி உள்ளவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!