பள்ளி மாணவர்களுக்கு 10 லட்சம் வரை உதவித்தொகை அறிவிப்பு – மத்திய அரசின் போட்டி!

0
பள்ளி மாணவர்களுக்கு 10 லட்சம் வரை உதவித்தொகை அறிவிப்பு - மத்திய அரசின் போட்டி!
பள்ளி மாணவர்களுக்கு 10 லட்சம் வரை உதவித்தொகை அறிவிப்பு - மத்திய அரசின் போட்டி!
பள்ளி மாணவர்களுக்கு 10 லட்சம் வரை உதவித்தொகை அறிவிப்பு – மத்திய அரசின் போட்டி!

இந்தியாவில் 75வது சுதந்திர தினவிழா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசு சார்பில் விநாடிவினா போட்டிகள் குறித்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.

சுதந்திர தினவிழா:

இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்தை தலைவர்கள் போராடி வாங்கி கொடுத்த நிலையில் அதனை ஆண்டுதோறும் கொண்டாடுவது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்நிலையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசு சார்பில் 13 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு விநாடிவினா போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்து பள்ளிக் கல்வித் இயக்குநகரம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் 13 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு இந்திய பாரம்பரியம் குறித்த விநாடி வினா போட்டி நடத்தப்பட இருக்கிறது. இது குறித்த விவரங்கள் www.akamquiz.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் புதிய மாற்றம் – தெற்கு ரயில்வே வாரியம் அறிவிப்பு

அதன் பின் மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். கடைசியாக இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் ரூ. 10 லட்சம் கல்வி உதவித்தொகைக்கு தகுதி பெறுவார்கள். மேலும் மொத்தமாக ரூ.55 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த விநாடி வினா போட்டி 17 மொழிகளில் நடைபெற உள்ளது. நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்து செல்வதே இந்த போட்டியின் நோக்கமாகும். அதனால் மாணவர்கள் இதில் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!