தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உதவித்தொகை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பில் ஆண்டுதோறும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியினை பதிவு செய்து விட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு அரசு தரப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தற்போது இத்திட்டத்தின் மூலம் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்ததற்கான கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600 வழங்கப்படும் எனவும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என பதிவு செய்த நபர்களுக்கு ரூ.900, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலை பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் 1 ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது.
TN Job “FB
Group” Join Now
இந்த உதவித்தொகையை பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படித்த பட்டதாரிகள் பெற முடியாது. இந்த உதவித்தொகை பெற தகுதி உள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.