பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
உரிமைத்தொகை:
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு நவ.7 ஆம் தேதி முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட தேர்தல் நவ.17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்களுக்காக ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் – மத்திய அரசு அறிமுகம்!!!
இந்நிலையில், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கிரக லட்சுமி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இது போக, மானிய விலையில் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் ஏகப்பட்ட வாக்குறுதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.