தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – கால அட்டவணை வெளியீடு!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - கால அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 20ம் தேதி தொடங்கியுள்ளது. இதற்கான புதிய தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தனித்தேர்வு:

தமிழகத்தில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த நிலையில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

டிசம்பர் 24 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 8ம் வகுப்பு தனித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி கடந்த மாதம் 8ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. தேர்வு நெருங்கும் நேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.அதன்படி தற்போது புதிய தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 14.12.2021 அன்று முதல் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் வாயிலாக ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

8ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!