SBI SCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்!

0
SBI SCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்!
SBI SCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்!
SBI SCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க பிப்.25 கடைசி நாள்!

SBI வங்கி சார்பில் தற்போது காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர்ஸ் (SCO ) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 5 தேதி முதல் 25ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணி நியமனம் ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SBI SCO வேலைவாய்ப்பு:

நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று காரணமாக அனைத்து துறைகளில் இருந்து வெளியாக இருந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் SBI வங்கியில் இருந்து ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர்ஸ் (எஸ்சிஓ) பணியிடங்கள் நிரப்பப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – மார்ச் 2 வரை நீட்டிப்பு! முழு விபரம் இதோ!

பணியின் பெயர்: ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர்ஸ், அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட், சீனியர் எக்ஸிகியூடிவ் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) மற்றும் சீனியர் எக்ஸிகியூடிவ் (பப்ளிக் ரிலேஷன்) ஆகியவற்றில் மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளது.

SCO பணிக்கு விண்ணப்பதாரர் கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் முழு நேரக் கல்வியில் MBA (மார்கெட்டிங்) / PGDM அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை, அதே துறையில் கொண்டிருக்க வேண்டும். டிகிரி தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 60 %மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் வயது வரம்பு:

1. அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்.

2. டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பப்ளிக் ரிலேஷன் ஆகிய பிரிவுகளில் சீனியர் எக்ஸிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும்.

தேர்வு முறை: விண்ணப்பித்தவர் விண்ணப்பங்கல் SHORTLIST செய்த பிறகு, நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி:
  • SBI வங்கியின் http://sbi.co.in/careers இணையதளத்தில் carrier பிரிவை பார்க்கவும்
  • HOME PAGE பக்கத்தில் சென்று, லேட்டஸ்ட் ஓபனிங்க்ஸ் என்பதை கிளிக் செய்து, ஒப்பந்த அடிப்படையில் எஸ்சிஓ பணியில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • New registration என்பதை கிளிக் செய்து உங்கள் பெயரை பதிவு செய்யவும். பூர்த்தி செய்த பதிவு விவரங்களை சேவ் செய்து, மேற்கொண்டு தொடரவும்
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி / எஸ்.டி / பிடபிள்யூடி ஆகிய பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 25

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!