SBI SCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

0
SBI SCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
SBI SCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
SBI SCO வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழில்துறைகள் முடக்கப்பட்டது. இருப்பினும் வங்கி நிர்வாகம் மக்கள் சேவைக்காக இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர்ஸ் ( SCO) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

இந்தியா முழுவதும் கொரோனா காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டு இருந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அரசு வங்கி என அழைக்கப்படும் SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபிசர்ஸ் ( SCO) பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு SBI நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் பணிகள் கடந்த 5 ஆம் தேதியே தொடங்கிவிட்டது. மேலும் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இது ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனம் ஆகும். மேலும் அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட், சீனியர் எக்ஸிகியூடிவ் மற்றும் சீனியர் எக்ஸிகியூடிவ் ஆகியவற்றில் மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் முழு நேரக் கல்வியில் எம்பிஏ (மார்கெட்டிங்) / பிஜிடிஎம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை, அதே துறையில் கொண்டிருக்க வேண்டும். மேலும் டிகிரி தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 60 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த அசிஸ்டெண்ட் வைஸ் பிரசிடெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும்.

Microsoft நிறுவனத்தில் B.Tech & M.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பப்ளிக் ரிலேஷன் ஆகிய பிரிவுகளில் சீனியர் எக்ஸிகியூடிவ் பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30 ஆகும். இதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் ஷார்ட்லிஸ்ட் செய்த பிறகு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

1. SBI வங்கியின் http://sbi.co.in/careers இணையதளத்தில் கேரீயர் பிரிவை பார்க்க வேண்டும். ஹோம் பேஜ் பக்கத்தில் சென்று, லேட்டஸ்ட் ஓபனிங்க்ஸ் என்பதை கிளிக் செய்து, ஒப்பந்த அடிப்படையில் எஸ்சிஓ பணியில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2.நியூ ரெஜிஸ்ட்ரேஷன் என்பதை கிளிக் செய்து உங்கள் பெயரை பதிவு செய்யவும். பூர்த்தி செய்த பதிவு விவரங்களை சேவ் செய்து, மேற்கொண்டு தொடர வேண்டும்.

3. மேலும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!