SBI வங்கியில் வேலை வேண்டுமா? சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு இதோ!
SBI வங்கி ஆனது Specialist Cadre Officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 09.01.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Specialist Cadre Officer (Deputy Manager, Senior Executive, Executive, Senior Special Executive) பணிக்கென மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகதில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ BTech/ MCA or MTech/ MSc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- பணியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.27 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.25,000/-
- தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Written Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.01.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.