
ரூ.1,000 முதலீட்டில் ரூ.15 லட்சம் லாபம் – SBI ன் திட்டம் தான் பெஸ்ட் சாய்ஸ்!
நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவரும் குறைந்த முதலீட்டில் நிலையான அதிக லாபத்தை பெற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு சேமிப்புத் திட்டங்களை ஆராய்ந்து வருகின்றனர். இவர்களுக்கு SBI இன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிக லாபம்:
நாட்டின் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் நிலையங்கள் மட்டுமல்லாமல் தனியார் நிதி நிறுவனங்களும் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இவற்றில் தனியார் நிறுவனங்களில் சேமிப்பது 100% பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால் அரசின் வங்கி, அஞ்சலகங்களில் சேமிக்கும் போது நமது பணத்திற்கு நிலையான வருமானமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் தங்கள் முதிர்வு காலத்தில் பென்சனைத் தவிர வேறு வருமானங்களை பெற வேண்டும் என்று நினைத்தால் எஸ்பிஐ வங்கியின் ஆன்யூட்டி டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் பயனர்கள் தங்கள் முதலீட்டை மொத்தமாக செலுத்த வேண்டும்.
TNPSC AE 2023 தேர்வு நெருங்கியாச்சு – குறுகிய காலத்தில் ஜெயிக்க சூப்பர் வாய்ப்பு!
120 மாதங்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர ஆண்டு தொகையாக ரூபாய் ஆயிரம் வரை நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் மாத மாதம் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். ரூபாய் 15,000 வரை டெபாசிட்களுக்கு முன் கூட்டி பணத்தை செலுத்திக்கொள்ளும் வசதிகளும் உள்ளது. பயனர்கள் செலுத்தும் வைப்பு தொகைக்கு அதிகபட்ச வரம்பு இல்லை. மேலும் மொத்த ஆண்டு தொகையில் 75% வரை ஓவர் டிராப்ட் அல்லது கடன் வாங்கிக் கொள்ளும் வசதியும் பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதலீடாளர்களுக்கு 6.1%, மூத்த குடிமக்களுக்கு 6.9% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.