SBI வங்கியில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – பிப்.25 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
SBI வங்கியில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - பிப்.25 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - பிப்.25 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – பிப்.25 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!

தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) நிறுவனம், MBA பட்டதாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்ப முறை குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்பு

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தற்போது ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. அந்த வகையில் SBI வங்கியில் உதவி மேலாளர், மூத்த நிர்வாகி உள்ளிட்ட பதவியில் காலியாக இருக்கும் 4 பணி இடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 25 வரை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தமிழக ரேஷன் கடைகளில் 3,803 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை!

இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது SBI வங்கி நிர்வாகம் அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான பதவி, கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காணலாம்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் MBA அல்லது PGDM பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
  • உதவி மேலாளர் பதவி – அதிகபட்சமாக 35
  • மூத்த நிர்வாகி – அதிகபட்சமாக 30
அனுபவம்:

உதவி மேலாளர் பணிக்கு 8 வருட முன் அனுபவம் அவசியம்.
மூத்த நிர்வாகி பணிக்கு 3 வருடங்கள் போதுமானது.

விண்ணப்ப முறை:
  • விண்ணப்பதாரர்கள் SBI வங்கியின் https://sbi.co.in/web/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும்.
  • இந்த இணையதளத்தின் முதல் பக்கத்தில் உள்ள new registration என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, submit கொடுக்கவும்.
  • இந்த கட்டணம் பொது பிரிவினருக்கு ரூ.750 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் SC, ST மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
  • இப்போது விண்ணப்பித்தவுடன் எதிர்கால தேவைக்காக அதனை பிரிண்ட் செய்து கொள்ளவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!