SBI PO Mains தேர்வு நுழைவு சீட்டு – இன்று வெளியீடு!
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான SBI PO பதவியில் உள்ள 1673 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக தற்போது SBI PO முதன்மை தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
வங்கியின் பெயர் | SBI |
பதவியின் பெயர் | PO |
காலிப்பணியிங்கள் | 1673 |
MAINS தேர்வு தேதி | 30.01.2023 |
நுழைவுச்சீட்டு | வெளியீடு |
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான SBI கடந்த செப்டம்பர் மாதம் 1673 PO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகு ஆன்லைன் வாயிலாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கான முதல் நிலை தேர்வு 2022 டிசம்பர் மாதம் 17,18,19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஜன. 17ம் தேதி வெளியிடப்பட்டது.
மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் மீதான வழக்கு – உயர்நீதி மன்ற மதுரை கிளையின் முக்கிய உத்தரவு!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட முதன்மை (MAINS) தேர்வு வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று SBI PO முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. SBI PO முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள இணையதள முகவரியில் உங்களது பதிவெண்ணை உள்ளீட்டு இருந்து SBI PO மெயின்ஸ் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Hall Ticket – Click Here