SBI PO Prelims நுழைவு சீட்டு 2022 – Hall Ticket பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்தியாவில் பொதுறை வங்கியான எஸ்பிஐ கடந்த செப்டம்பர் மாதம் PO பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக இப்பணிக்காண முதல் நிலை எழுத்து தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஹால் டிக்கெட் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
SBI (PO) ஹால் டிக்கெட்:
இந்தியாவில் பொதுத்துறை வங்கியான SBI அவ்வப்போது காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் SBI வங்கியில் காலியாக உள்ள 1673 Probationary Officer (PO) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் வாயிலாக விருப்பமுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அகிய முறைகளில் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் SBI PO முதல் நிலை தேர்வு டிசம்பர் மாதம் 17,18,19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
IBPS-ல் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியம் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
Exams Daily Mobile App Download
ஹால்டிக்கெட் Download செய்யும் முறைகள் :
- முதலில் https://sbi.co.in என்ற வங்கியின் அதிகார்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் முகப்பு பக்கத்தில் காட்டப்படும் SBI PO ஹால் டிக்கெட் 2022 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து வரும் பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
- இறுதியாக எண்களை சரிபார்த்து Summit கொடுக்கவும்.
- பிறகு உங்களது ஹால் டிக்கெட் திரையில் காண்பிக்கப்படும். இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.