SBI PO முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு – முழு விவரம் இதோ!

0
SBI PO முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு - முழு விவரம் இதோ!
SBI PO முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு - முழு விவரம் இதோ!
SBI PO முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு – முழு விவரம் இதோ!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி SBI PO மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதல்நிலை தேர்வுகளை நடத்தி இருந்த நிலையில், இந்த தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) நிறுவனத்தில் காலியாக இருக்கும் சுமார் 2056 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் 20, 21, 27 ஆகிய தேதிகளில் முதல்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தது. இந்த தேர்வில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இப்படி இருக்க SBI PO முதல்நிலைத் தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று (டிச.15) வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அந்த வகையில் SBI PO முதல்நிலைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வு முடிவுகளை SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு முடிவுகளை சரிபார்க்க தேர்வர்கள் தங்களது ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது முதல்நிலை தேர்வில் தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

ஜனவரி 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!

இந்த முதன்மை தேர்வுக்கான தேதி SBI PO அட்மிட் கார்டு வெளியிடப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது SBI முதல்நிலை தேர்வின் முடிவுகளை தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த வகையில்,

  • முதலாவதாக SBI வங்கியின் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • அதன் முகப்பு பக்கத்தில் உள்ள Careers portal இணைப்பை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து Recruitment of Probationary Officers, Marks Secured by the Candidate என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • அதில் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • இதில் SBI PO தேர்வு முடிவுகளை சரிபார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!