SBI வங்கியின் ஓய்வூதிய சேவை வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வலைதளம் புதுப்பிப்பு!

0
SBI வங்கியின் ஓய்வூதிய சேவை வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வலைதளம் புதுப்பிப்பு!
SBI வங்கியின் ஓய்வூதிய சேவை வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வலைதளம் புதுப்பிப்பு!
SBI வங்கியின் ஓய்வூதிய சேவை வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வலைதளம் புதுப்பிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ஓய்வூதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இந்த இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளும் சேவைகள் குறித்த விரிவான விளக்கங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

SBI சேவை

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு சேவைகளை தற்போது ஆன்லைன் மூலமே எளிதாக்கியுள்ளது. குறிப்பாக SBI வங்கி தனது மூத்த வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை தற்போது மேம்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் SBI வங்கியின் https://www.ptensionseva.sbi என்ற இணையதள சேவைகள் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூத்த வாடிக்கையாளர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான சேவைகள் எளிதாக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் வெளுத்து வாங்கப் போகும் கனமழை – வானிலை அறிக்கை!

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள SBI வங்கி நிர்வாகம், ‘SBI வங்கியின் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு முக்கிய செய்தி. இனி உங்கள் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து சேவைகளையும் நீங்கள் எளிதாக நிர்வகிக்க எங்கள் ஓய்வூதிய சேவை வலைதளத்தை நாங்கள் புதுப்பித்துள்ளோம்’ என்று பதிவு செய்துள்ளது. இப்போது SBI வங்கியில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஓய்வூதிய சேவைகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில்,

  • ஓய்வூதிய சீட்டு அல்லது படிவம் 16 பதிவிறக்கம்.
  • ஓய்வூதிய பரிவர்த்தனை விவரங்கள்.
  • நிலுவை கணக்கீட்டு தாள் பதிவிறக்கம்.
  • முதலீடு தொடர்பான விவரங்கள்.
  • வாழ்க்கை சான்றிதழ் நிலை.
  • ஓய்வூதிய விவரம் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
SBI ஓய்வூதியதாரர்களுக்கு நீட்டிக்கப்பட்ட நன்மைகள்:
  • ஓய்வூதிய கட்டண விவரங்களுக்கான SMS எச்சரிக்கை
  • மின்னஞ்சல் அல்லது ஓய்வூதியம் செலுத்தும் கிளை மூலம் ஓய்வூதிய சீட்டு.
  • ஜீவன் பிரமான் வசதி.
  • SBI வங்கியின் எந்த கிளையிலும் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வசதி
குறைகளை நிவர்த்தி செய்யும் சேவை:
  • SBI வங்கி இணையதளத்திற்குள் உள்நுழையும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், பிழை ஸ்கிரீன்ஷாட் புகைப்படத்தை எடுத்து [email protected]  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
  • UNHAPPY ’ என்று SMS செய்து 8008202020 எண்ணுக்கு அனுப்பலாம்.
  • வங்கியின் 24X7 வாடிக்கையாளர் சேவையின் மூலம் எந்த நேரமும் நீங்கள் வங்கியை அணுகலாம். 18004253800 அல்லது 1800112211 என்ற கட்டணமில்லா எண்களை உபயோகிக்கலாம்.
  • வங்கி இணையதளங்களான bank.sbi/[email protected].in/[email protected]  இல் புகார்களை பதிவு செய்யலாம்.
SBI ஓய்வூதிய சேவைக்கு பதிவு செய்ய:
  • முதலில் பயனர் ஐடியை உருவாக்கவும்.
  • இப்போது, உங்கள் ஓய்வூதிய கணக்கு எண்ணை உள்ளிடவும்.
  • பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • ஓய்வூதியம் செலுத்தும் கிளையின் கிளை குறியீட்டை உள்ளிடவும்.
  • வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடியை கொடுக்கவும்.
  • புதிய கடவுச்சொல்லை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
  • இப்போது SBI வங்கியில் உங்கள் ஓய்வூதிய சேவை பதிவு செய்யப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!