அதிக வட்டி கிடைக்கும் சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!
இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்கள் பாதுகாப்பான வருமானம் பெற பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த குடிமக்கள் கால வைப்புத் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.
சேமிப்பு திட்டம்
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கான கால வைப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் சேமிப்பதற்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த எஸ்பிஐயின் எஃப்டி திட்டத்தில் மூத்த குடிமக்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வுக்காக டெபாசிட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வைக்கும் அகவிலைப்படி கோரிக்கை – இன்று ஆலோசனை!
மேலும் இந்த திட்டத்தில் வழக்கமான வாடிக்கையாளர்களை விட மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு அரை சதவீதம் ( 0.50 சதவிகிதம் ) அதிக வட்டி கிடைக்கும். மேலும் மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு 1 சதவிகிதம் கூடுதல் வட்டி கிடைக்கும். மேலும் இந்த வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவிகித வருடாந்திர வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளில் எஸ்பிஐ வீ-கேர் டெபாசிட் திட்டத்தின் கீழ் கூடுதலாக அரை சதவீத பிரீமியம் வட்டியும் கிடைக்கும்.