SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஓய்வூதியர்களின் ஆன்லைன் சேவைகள் புதுப்பிப்பு!

0
SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ஓய்வூதியர்களின் ஆன்லைன் சேவைகள் புதுப்பிப்பு!
SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - ஓய்வூதியர்களின் ஆன்லைன் சேவைகள் புதுப்பிப்பு!
SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஓய்வூதியர்களின் ஆன்லைன் சேவைகள் புதுப்பிப்பு!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)ல் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வூதியம் தொடர்புடைய சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ளும் படி PensionSeva இணையதளத்தை புதுப்பித்துள்ளதாக SBI வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஓய்வூதிய சேவை

வாடிக்கையாளர்களுக்கான சிறந்த சேவைகளை வழங்குவதில் முக்கியத்துவம் கொடுத்து வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சேவைகளை பயனர்கள் வீட்டிலிருந்தே எளிதாக மேற்கொள்ளும் வகையில் PensionSeva தளத்தை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் SBI வங்கியின் மூத்த வாடிக்கையாளர்கள் எவ்வித அலைச்சலும் இல்லாமல் தங்களது ஓய்வூதியம் தொடர்புடைய சேவைகளை இனி நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 356% அகவிலைப்படி உயர்வு – தகுதி உள்ளிட்ட விவரங்கள்!

இந்த வலைதள மேம்பாடு தொடர்பாக SBI வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘SBI வங்கியின் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு நல்ல செய்தி! உங்கள் ஓய்வூதியம் தொடர்பான அனைத்து சேவைகளையும் எளிதாக நிர்வகிக்க எங்கள் பென்ஷன் சேவா வலைதளத்தை நாங்கள் புதுப்பித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் பென்ஷன் சேவா போர்ட்டல் மூலம் ஓய்வூதியதாரர்கள் SBI வங்கியின் கீழ்காணும் சேவைகளை அனுபவிக்க முடியும்.

சேவைகள்:

  • ஓய்வூதியதாரர்கள் இனி ஓய்வூதிய சீட்டு அல்லது படிவம் 16 ஐ போர்டல் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
  • ஓய்வூதிய பரிவர்த்தனை விவரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்ள முடியும்.
  • நிலுவை கணக்கீட்டுத்தாளையும் ஓய்வூதியதாரர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
  • ஓய்வூதியதாரர்கள் இப்போது தங்கள் முதலீடு தொடர்பான விவரங்களை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
  • வாழ்க்கைச் சான்றிதழின் நிலையை சரிபார்க்கலாம்.

தமிழக அரசு சார்பில் இலவச மின் இணைப்பு – முதல்வர் நாளை தொடக்கி வைப்பு!

  • ஓய்வூதியம் பெறுபவர்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் SMS செய்வதன் மூலம் ஓய்வூதிய கட்டண விவரங்களை பெறலாம்.
  • SBI இப்போது அனைத்து வங்கி கிளைகளிலும் ஜீவன் பிரமான் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதிய சீட்டை மின்னஞ்சல் அல்லது ஓய்வூதியம் செலுத்தும் கிளை மூலம் பெறலாம்.
  • ஓய்வூதியம் பெறுவோர் இனி எந்த வங்கிக் கிளையிலும் தங்கள் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
SBI வங்கியின் குறை தீர்ப்பு சேவை:
  • ஓய்வூதியதாரர்கள் இணையதளத்துக்குள் நுழையும்போது ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், அதில் ஏற்பட்ட பிழையின் ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
  • மேலும் பிழையைப் புகாரளிக்க, ஓய்வூதியதாரர்கள் “UNHAPPY” என டைப் செய்து 8008202020 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம்.

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க திட்டமிடுபவரா நீங்கள்? இதோ அரிய வாய்ப்பு!

  • ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை SBI வங்கியின் கட்டணமில்லா எண்கள் 18004253800, 1800112211 அல்லது 080-26599990 மூலம் எந்த நேரத்திலும் தெரிவிக்கலாம்.
  • ஓய்வூதியதாரர்கள் தங்கள் பிழைகளை https://bank.sbi/ அல்லது @@sbi.co.in மற்றும் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் தெரியப்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!