SBI வங்கியில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || விரைவில் விண்ணப்பியுங்கள்..!

0
SBI வங்கியில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது || விரைவில் விண்ணப்பியுங்கள்..!
SBI வங்கியில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது || விரைவில் விண்ணப்பியுங்கள்..!
SBI வங்கியில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || விரைவில் விண்ணப்பியுங்கள்..!

வங்கி துறையில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சமீபத்தில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு அமைந்துள்ளது. இதில் காலியாக உள்ள FLC Counsellors, FLC Directors ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் State Bank of India (SBI)
பணியின் பெயர் FLC Counsellors, FLC Directors
பணியிடங்கள் 211
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பாரத ஸ்டேட் வங்கி காலிப்பணியிடங்கள்:

FLC Counsellors பணிக்கு 207 பணியிடங்கள் வீதமும், FLC Director பணிக்கு 04 பணியிடங்கள் வீதமும் என மொத்தமாக 211 பணியிடங்கள் பாரத ஸ்டேட் வங்கி (SBI) நிரப்பப்பட உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்கலாம். இதை பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
பாரத ஸ்டேட் வங்கி தகுதிகள்:
  • FLC Counsellors, FLC Directors பணிகளுக்கு அரசு அல்லது தனியார் வங்கிகள் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் பெற்றவராகவும், உள்ளூர் மொழிகளில் சரளமாக பேச மற்றும் எழுத, படிக்கத் தெரிந்தவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Smartphone வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கி வயது விவரம்:

இந்த SBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15.06.2022 அன்றைய தேதியின் படி குறைந்தபட்சம் 60 வயது எனவும், அதிகபட்சம் 63 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 63 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

பாரத ஸ்டேட் வங்கி சம்பளம்:

FLC Counsellors, FLC Directors பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஊதிய முறைகளின்படி, மாத சம்பளம் பெறுவார்கள்.

  • JMGS-I Grade பணிக்கு – ரூ.35,000/-
  • MMGS-II Grade பணிக்கு – ரூ.40,000/-
  • MMGS-III Grade பணிக்கு – ரூ.40,000/-
  • SMGS-IV Grade பணிக்கு – ரூ.45,000/-
  • SMGS-V Grade பணிக்கு – ரூ.60,000/-

TNPSC No.1 Coaching Center – Join Immediately

பாரத ஸ்டேட் வங்கி தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் Shortlist மற்றும் Interview (நேர்முகத் தேர்வு) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இந்த SBI வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (30.06.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

SBI Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!