SBI வங்கியில் திருவிழா கால சலுகைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
SBI வங்கியில் திருவிழா கால சலுகைகள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
SBI வங்கியில் திருவிழா கால சலுகைகள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
SBI வங்கியில் திருவிழா கால சலுகைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன், கார் கடன், தங்கக் கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றில் பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

கடன் சலுகை

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) பண்டிகை கால சலுகைகளாக தனது வாடிக்கையாளர்களின் வீட்டுக்கடன், கார் கடன், தங்கக்கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றில் பல சலுகைகளை வழங்க உள்ளது. இந்த கடன் சலுகைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் இது தொடர்பான செயல்முறை மற்றும் திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்களை sbi.co.in என்ற SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை – அமைச்சர் அறிவிப்பு!

இது தொடர்பாக SBI வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள சமீபத்திய ட்விட்டர் பதிவில், ‘கார் கடன், தங்கக் கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான சிறப்பு சலுகைகளுடன் பண்டிகை கால கொண்டாட்டங்களை SBI வங்கியுடன் தொடங்கவும். அதற்காக இப்போதே விண்ணப்பிக்கவும்’ என குறிப்பிட்டுள்ளது. இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ள SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் SBI யோனோ ஆப் மூலமும் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் SBI வங்கி, கார் கடனில் ஒரு லட்சத்திற்கு ரூ.1539 யும், தங்கக் கடன்களுக்கு 7.5 சதவீத வட்டியும் அளிக்கிறது. இது தவிர தனிநபர் கடனில் ஒரு லட்சத்திற்கு ரூ.1832 வரை சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும் பண்டிகை காலங்களில் வழங்கப்படும் வீட்டுக் கடன் நன்மைகள் குறித்து SBI வங்கி முன்னமே அறிவித்திருந்தது. அதன் கீழ் வாடிக்கையாளர்களின் வீட்டுக் கடன்களை பூஜ்ஜிய செயலாக்க கட்டணத்துடன் இவ்வங்கி வழங்குகிறது. மேலும், கடன் மதிப்பெண்களுடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களை வெறும் 6.70 சதவீதத்தில் SBI அளிக்கிறது.

செல்லப்பிராணிகளை இழந்த ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் விடுப்பு – கொலம்பியா அரசு முடிவு!

முன்னதாக 75 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெறுபவர்கள் 7.15% வட்டியை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, பண்டிகை கால சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், கடன் வாங்குபவர் இனி 6.70 சதவிகிதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்தில் எந்தத் தொகைக்கும் வீட்டுக் கடனை பெறலாம். இந்த சலுகை 45 bps சேமிப்பிற்குள் வருகிறது. மேலும், சம்பளமில்லாத கடன் வாங்குபவருக்கு பொருந்தும் வட்டி விகிதம் 15 bps அதிகமாக இருக்கும். இது தவிர சம்பளதாரர் மற்றும் சம்பளமற்ற கடன் பெறுபவருக்கு இடையே உள்ள வேறுபாட்டை SBI வங்கி நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!