SBI கிரெடிட் கார்டு EMI செலுத்துவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
SBI கிரெடிட் கார்டு EMI செலுத்துவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SBI கிரெடிட் கார்டு EMI செலுத்துவோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SBI கிரெடிட் கார்டு EMI செலுத்துவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ வங்கியில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இனி தவணை முறையில் பொருட்கள் வாங்கும் போது அதற்கான செயல்பாட்டு கட்டணமாக ரூ.99 மற்றும் விதிகளுக்கு உட்பட்டு கூடுதல் வரிகளும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள் அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இனி கிரெடிட் கார்டுகளுக்கு செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் ஈஎம்ஐ செலுத்துவதில் வரியை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தற்போது ஒவ்வொரு முறை எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதல் கட்டணம் மற்றும் வரியும் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே கிரெடிட் கார்டு மூலம் வாங்கப்படும் கடன்களுக்கு அதிகப்படியான வரியை வசூலித்து வருகின்றன. இதில் இந்த புதிய கட்டண முறை வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 முதல் 7ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15 வரை பள்ளிகள் மூடல் – ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!

இந்த புதிய நடைமுறை இன்று (டிச.1) முதல் அமலுக்கு வருவதாக SBI வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை கிரெடிட் கார்டு வைத்திருப்போரின் மின்னஞ்சலுக்கு நவம்பர் மாதம் 12ஆம் தேதியே அனுப்பப்பட்டுள்ளது. அதில் கடைகளில் பொருட்களை இணையதளம் அல்லது செயலியை பயன்படுத்தி தவணை முறையில் வாங்குவதற்கான செயல்பாட்டுக் கட்டணம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ரூ.99 மற்றும் விதிகளுக்கு உட்பட்டு கூடுதல் வரிகளும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது சில்லறை விற்பனை மையங்கள் , ஆன்லைன் ஷாப்பிங் , கடைகள் என எங்கு பரிவர்த்தனை செய்தாலும் இந்த புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ரூ.3000 உதவித்தொகையுடன் சைவ பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் தற்போது ‘buy now pay later’ என்ற நடைமுறை பிரபலமாகி வருகிறது. அதாவது பொருட்களை முன்கூட்டியே வாங்கிவிட்டு அதற்கான தொகையை தவணை முறையில் அதன் பின்னர் செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு ஒரே தடவையில் பெரிய தொகையை செலுத்துவதற்கு பதிலாக மாதந்தோறும் ஒரு சிறு தொகையை செலவிட நடுத்தர மக்களுக்கு சுலபமாக இருக்கும். ஆனால் SBI-யின் இந்த புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு பொருளை SBI கிரெடிட் கார்டில் வங்கி, அந்த தொகையை தவணை முறையில் செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த புதிய கட்டண மாற்றம் பொருந்தும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!