SBI வங்கியின் வாட்ஸ்அப் சேவைகள் துவக்கம் – பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?

0
SBI வங்கியின் வாட்ஸ்அப் சேவைகள் துவக்கம் - பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?
SBI வங்கியின் வாட்ஸ்அப் சேவைகள் துவக்கம் - பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?SBI வங்கியின் வாட்ஸ்அப் சேவைகள் துவக்கம் - பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?
SBI வங்கியின் வாட்ஸ்அப் சேவைகள் துவக்கம் – பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் வாட்ஸ்அப் மூலமான பண பரிவர்த்தன சேவைகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது அதன்மூலம் எப்படி அக்கௌன்ட் பேலன்ஸ் அறிந்து கொள்வது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி:

இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட முன்னணி வங்கிகள் வாட்ஸ்அப் மூலமாகவே எளிமையாக பண பரிவர்த்தனைகளை செய்துகொள்ளும்படியான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி(SBI) வங்கி வாட்ஸ்அப் பேங்கிங் சேவையை தற்போது தொடங்கியுள்ளது. அதாவது, வாட்ஸ்அப் மூலமாகவே பணப்பரிவர்த்தன சேவைகள் வழங்கப்பட்டுள்ளதால் வேறு எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.

Exams Daily Mobile App Download

அது மட்டுமல்லாமல் வாட்ஸ்அப்பிலேயே பேங்க் பேலன்ஸ் குறித்தான விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். அதாவது, எஸ்பிஐ வங்கியின் வாட்ஸ்அப் வங்கி சேவைகளை தொடர விரும்பும் வாடிக்கையாளர்கள் +919022690226 என்ற எண்ணில் ‘Hi’ என குறுஞ்செய்தி அனுப்பினாலே போதும். மேலும், வங்கி பண பரிமாற்றம், அக்கௌன்ட் பேலன்ஸ் தவிர வேறென்ன சேவைகள் கிடைக்கும் என்பதை இன்னும் SBI வங்கி வெளியிடவில்லை. இதனையடுத்து, SBI வங்கியின் கணக்கை பதிவு செய்யவில்லை எனில் முதலில் வங்கியுடன் இணைக்கப்பட்ட எண்ணுடன் வாட்ஸ்அப்பில் எஸ்பிஐ வங்கி சேவைகளை பெற ஒப்புதல் வாங்க வேண்டும்.

தற்போது எப்படி எஸ்பிஐ கணக்கை வாட்ஸ்அப் பேங்கிங் சேவைகளில் பதிவு செய்வது மற்றும் பேலன்ஸ் தெரிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். இதற்காக, முதலில் வங்கியுடன் இணைக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து 917208933148 என்கிற எண்ணிற்கு SMS WAREG A/c என அனுப்பவும். பின்பு, +919022690226 என்ற எண்ணிற்கு ‘Hi’ SBI என அனுப்ப வேண்டும். பின்னர், கணக்கு இருப்பு, சிறு அறிக்கை, வாட்ஸ்அப் வங்கியிலிருந்து பதிவு நீக்கம் ஆகியவற்றில் இருந்து ஒன்றை தேர்வு செய்து அக்கௌன்ட் பேலன்ஸ் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!