SBI வங்கி வாடிக்கையாளர்கள் தவறாமல் படிங்க – முடக்கப்படும் சேவைகள்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் தவறாமல் படிங்க - முடக்கப்படும் சேவைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் தவறாமல் படிங்க - முடக்கப்படும் சேவைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் தவறாமல் படிங்க – முடக்கப்படும் சேவைகள்!

இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில், நாளை (ஜூன் 20) இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்காது என தகவல்கள் கிடைத்துள்ளது.

வங்கி சேவைகள்

வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ளும் முறையில் மொபைல் ஆப் வழிமுறைகள் அறிமுகப்படுத்தத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகள் மூலம் ஒரே நேரத்தில் பலர் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள முயற்சிப்பதால் வங்கியின் மெயின் அலுவலகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அதை சரி செய்யும் பொருட்டு SBI வங்கியின் டெக் தளத்தில் மெயின்டனன்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஜூலை 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – நேரடி வகுப்புகள் தொடக்கம்!

இதனால் வரும் ஜூன் 20 ஆம் தேதி, அதாவது நாளை SBI வங்கியின் இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் உள்ளிட்டவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி SI வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 20 ஆம் தேதி இரவு 1மணி முதல் 1.40 மணி வரையில், ஏறத்தாழ 40 நிமிடம் இண்டர்நெட், யூபிஐ, மொபைல் ஆப் வங்கி சேவைகளை முடக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடக்கமானது இரவு நேரத்தில் ஏற்படும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் குறிப்பிடப்பட்ட 40 நிமிடத்தில் SBI வங்கியின் இண்டர்நெட் வங்கி சேவை, யூனோ, யூனோ லைட், யூபிஐ ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது. இதனால் அதற்கு முன்னாகவே வாடிக்கையாளர்கள் விரைந்து தங்களது பணப்பரிமாற்ற வேலைகளை செய்து முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அல்லது ஜூன் 20 ஆம் தேதி இரவு 1.40 மணிக்கு மேல் இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நிறைவேற்றிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!