SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் சேவைகள்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் சேவைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் சேவைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் சேவைகள்!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது இருக்கும் இடங்களில் இருந்தபடியே ஆன்லைன் வங்கி மற்றும் தொலைபேசி வங்கி சேவைகளை அனுபவித்து கொள்ளலாம் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் சேவைகள்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சிறப்பு சேவைகளை அளித்து வருகிறது. பொதுவாக வங்கிகள் தோறும் கடன் சலுகைகள், வட்டி சலுகைகள் போன்ற சில அடிப்படையான சலுகைகளை வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் SBI வங்கி ஒரு படி மேலே சென்று தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வீடுகளுக்கு சென்றே கொடுத்து வருகிறது. அதிலும் கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீடுகளுக்கு சென்று சேவைகளை நிறைவேற்றி தருகிறது.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இதற்கிடையில் மொபைல் பேங்கிங் மூலம் பண பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மோசடி தொடர்பான சில முக்கியமான அறிவுறுத்தல்களையும் வங்கி நிர்வாகம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் SBI பயனர்கள் சில அத்தியாவசிய சேவைகளை தங்கள் வீடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் வகையில் சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் மூலம் SBI வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள், ஹெல்ப்லைன், தொலைபேசி வங்கி போன்றவற்றை பயன்படுத்தி சில வங்கி சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சில வரைமுறைகளை வெளியிட்டுள்ள SBI வங்கி நிர்வாகம் அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது.

  • அதன் கீழ் SBI வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் மூலம் பல சேவைகளைப் பெறலாம்.
  • வாடிக்கையாளர்கள் IVR ஐ அழைப்பதன் மூலம் வங்கி கணக்கின் இருப்பு மற்றும் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளை சரிபார்க்கலாம்.
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இருப்பு மற்றும் கடைசி 5 பரிவர்த்தனைகளை SMS மூலமும் சரிபார்க்கலாம்.
  • தவிர ATM அட்டைகளை லாக் செய்வதற்கும், மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் இந்த எண்களை அணுகலாம்.
  • வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் ATM அல்லது Green பின்னை உருவாக்கலாம்.
  • பழைய ATM அட்டையை லாக் செய்த பிறகு புதிய ATM கார்டு பெற்றுக்கொள்ளவும் ஒருவர் விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கூறிய சேவைகளைப் பெற 1800 112 211 மற்றும் 1800 425 3800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் SBI ஆன்லைன் நெட் பேங்கிங் சேவைகளை பொருத்தளவு,

  • பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள விவசாய வாடிக்கையாளர்கள் தங்கள் கிசான் கிரெடிட் கார்டை (KCC) மறுபரிசீலனை செய்ய விண்ணப்பிக்கலாம்.
  • இந்த சேவைகளை வீடுகளில் இருந்தபடியே வாடிக்கையாளர்கள் https://www.sbiyono.sbi/index.html என்ற இணையதளத்தை பயன்படுத்தி மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!