SBI வங்கி குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் கடன் – கொரோனா சிகிச்சை!

4
SBI வங்கி குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் கடன் - கொரோனா சிகிச்சை!
SBI வங்கி குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் கடன் - கொரோனா சிகிச்சை!
SBI வங்கி குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் கடன் – கொரோனா சிகிச்சை!

கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் சிகிச்சை மேற்கொள்வதற்கான பணப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் SBI வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு சில நிதி உதவிகளை மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்குகிறது.

கடன் திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, கொரோனா சிகிச்சைக்கான கடனை மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்குகிறது. அந்த வகையில் SBI வங்கி கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, இணை-இலவச கடன் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொடர்பான சிகிச்சைகளை மேற்கொள்ள கடன் பெற்றுக்கொள்ள முடியும்.

EPFO பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வங்கிகளின் IFSC code மாற்றம்!

இது குறித்து SBI தலைவர் தினேஷ் காரா கூறுகையில், ‘SBI வங்கியின் வாடிக்கையாளர்கள் மூன்று மாத கால அவகாசம் உட்பட 60 மாதங்களுக்கு, 8.5 சதவிகிதம் வட்டி விகிதத்தில் ரூ .5 லட்சம் வரை கடன்களைப் பெற முடியும்’ என தெரிவித்துள்ளார். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது தகுதிக்கு ஏற்ப குறைந்தபட்சம் 25,000 ரூபாயும், அதிகபட்சமாக 5 லட்சத்தையும் பெறலாம். இந்த கடன்களுக்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் மூன்று மாதம் கால அவகாசமும் அடங்கும்.

இது தவிர 60 மாத கடனுக்காக, மொராட்டோரியத்தின் போது வசூலிக்கப்படும் வட்டியை, 57 EMI களில் திருப்பி செலுத்த வேண்டும். SBI யின் கவாச் திட்டத்தின் கீழ் இணை இல்லாத தனிநபர் கடன் பிரிவின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த பிரிவின் கீழ் மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கப்படுகிறது என SBI தெரிவித்துள்ளது. கவாச் தனிநபர் கடனுக்காக வசூலிக்கப்படும் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.5% ஆக இருக்கும். தற்போது, SBI வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு வழங்கிய தனிப்பட்ட கடன்களுக்கு 9.6% முதல் 13.85% வரை வட்டி விகிதத்தை வசூலிக்கிறது.

TN Job “FB  Group” Join Now

கூடுதலாக, கடன் வாங்கியவர்கள் அந்த கடன் தொகையில் 1.5% மற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரியையும் செயலாக்க கட்டணமாக செலுத்த வேண்டும். கவாச் தனிநபர் கடனைப் பெறுவதற்கு, SBI வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள வங்கி கிளைகளில் ஏதேனும் ஒன்றை அணுகலாம். மேலும் இந்த கடனுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் அதற்குரிய ஆவணங்கள், KYC போன்றவற்றை கொடுத்து கடன் பெறலாம். தவிர SBI யின் மொபைல் வங்கி சேவையை பயன்படுத்துபவர்கள், இந்த கடன் சேவையை டிஜிட்டல் முறையில் பெறலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. It is completely fake news,I contact nandampakkam SBI bank,they told many formalities,really they don’t want to give loan to affected and middle class ,they only give govt employees and corporate owners only.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!