SBI வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
SBI வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SBI வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SBI வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. மேலும், SBI வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஆகிய ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்:

சேமிப்புகளை பாதுகாக்கவும், நம்பகமான முதலீட்டு ஊடகமாகவும் வங்கி நிலையான வைப்புத்தொகை விளங்கி வருகிறது. அதாவது, முதலீட்டாளர் தனது சேமிப்பு பணத்தை விருப்பப்பட்ட சேமிப்பு திட்டத்தின் மூலமாக வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வைக்கலாம். மேலும், அவசர காலத்திலும் இந்த தொகையை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனிடையே, நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

அதாவது, வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 5.4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெரும்பாலான கடன் வழங்குநர்கள் நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளனர். தற்போது ஒவ்வொரு வங்கிகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையான வைப்புத்தொகை விகிதத்தை பார்க்கலாம். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் உத்சவ் டெபாசிட் என்கிற புதிய வைப்புத்தொகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

மேலும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான FD விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.55% முதல் 6.15% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கூட்டுறவு வங்கிகளின் உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கும் பொருந்தும் என SBI அறிவித்துள்ளது. அதே போல பாங்க் ஆஃப் பரோடா வங்கியும், பரோடா திரங்கா டெபாசிட் என்கிற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆகஸ்ட் 16 முதல் டிசம்பர் 31, 2022 வரை செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் 444 நாட்களுக்கு 5.75% முதல் 6.25% வரை வட்டியும், 555 நாட்களுக்கு 6% முதல் 6.50% வரையிலான வட்டியும் வழங்கப்படுகிறது. இதனையடுத்து, ஐசிஐசிஐ வங்கியிலும் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!