SBI வங்கியில் 1,226 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!

1
SBI வங்கியில் 1,226 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!
SBI வங்கியில் 1,226 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!
SBI வங்கியில் 1,226 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம், விண்ணப்ப முறை விளக்கம்!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி, தனது நிறுவனத்தில் காலியாக இருக்கும் 1,226 வங்கி வட்ட அடிப்படையிலான அதிகாரிகளின் (CBO) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்பு

தற்போது நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை தாக்கம் குறைந்து வந்ததையடுத்து பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடுகளில் தற்போது முன்னணி இடத்தில் இருந்து வருவது தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் தான். அந்த வகையில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 24 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 2022 பட்டியல் வெளியீடு!

அதாவது SBI வங்கி செயல்பட்டு வரும் ஒவ்வொரு மாநிலங்களிலும் வட்ட அடிப்படையிலான அதிகாரி (CBO) பணிகளில் 1,226 காலியிடங்கள் ஏற்பட்டிருக்கிறது. இப்போது இப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறைகள் அனைத்தும் ஆன்லையே மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பணியில் சேர விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக இந்திய குடிமக்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

பதிவு செயல்முறை:

டிசம்பர் 9 முதல் 29 டிசம்பர் 2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1 டிசம்பர் 2021 தேதிக்குள் 21 முதல் 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்கலாம்.

ஊதியம்:
  • இப்பணிக்கான அடிப்படை ஊதியம் ரூ.36,000ல் தொடங்கி, நிலையை பொறுத்து மாதம் ரூ.63,840 வரை கொடுக்கப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அந்த மாநிலத்தின் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மொழியில் திறமையானவராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் போது ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும்.
இதற்கு விதிவிலக்குகளும் உள்ளன.

யார் விண்ணப்பிக்கலாம்:
  • SBI வங்கியில் எழுத்தர் அல்லது மேற்பார்வை கேடரில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
  • SBI இல் அதிகாரி தரத்தில் இருந்து ராஜினாமா செய்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விளக்கம்!

  • ஒரு விண்ணப்பதாரரால் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படக்கூடாது.
  • பல விண்ணப்பங்கள் இருந்தால், கடைசியாக செல்லுபடியாகும்.
கல்வித் தகுதி:
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் ஷெட்யூல்ட் கமர்ஷியல் வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் அதிகாரியாக 1 டிசம்பர் நிலவரப்படி குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் தேவை.
தேர்வு செயல்முறை:
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
  • இதில் தேர்வு செய்யப்பட்டவுடன் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • ஆன்லைன் தேர்வு ஜனவரி 2022 இல் நடைபெறும்.
  • விண்ணப்பதாரர்கள் ஒரு மாநிலத்தில் மட்டுமே காலியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
  • விண்ணப்ப பதிவு ஆரம்பம் – 9 டிசம்பர் 2021
  • விண்ணப்பப் பதிவு முடிவு – 29 டிசம்பர் 2021
  • விண்ணப்ப விவரங்களைத் திருத்துதல் – 29 டிசம்பர் 2021
  • விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி தேதி – 13 ஜனவரி 2022
  • ஆன்லைனில் கட்டணம் செலுத்துதல் – 9 டிசம்பர் 2021 முதல் 29 டிசம்பர் 2021 வரை
விண்ணப்ப முறை:
  • விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவுசெய்த பிறகு விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இணைய வங்கி மூலம் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
  • படிவத்தை நிரப்புவதில் கட்டணம், அறிவிப்புக் கட்டணங்கள் அல்லது சேர்க்கைக்கான ரசீது, அழைப்புக் கடிதம் ஆகியவற்றில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், 022-22820427 என்ற தொலைபேசி எண்ணின் கீழ் கேள்விகளை பதிவு செய்யலாம்.
தேவையான ஆவணங்கள்:
  • சமீபத்திய புகைப்படம் (jpg/jpeg)
  • கையொப்பம் (jpg/jpeg)
  • அடையாளச் சான்று (PDF)
  • பிறப்பு சான்று (PDF)
  • வேலை சுயவிவரம் (PDF)
  • ரெஸ்யூம் (PDF)
  • கல்விச் சான்றிதழ்கள் தொடர்புடைய மதிப்பெண் தாள்கள், பட்ட சான்றிதழ் (PDF), அனுபவச் சான்றிதழ், நியமனக் கடிதம், வேலை வாய்ப்புக் கடிதம் (PDF)
    படிவம்-16, சம்பள சீட்டு (PDF)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!