SBI வங்கியில் 36 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
SBI வங்கியில் 36 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் 36 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் 36 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 36 காலிப் பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 17 ஆம் தேதிக்குள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

SBI வங்கி:

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடம் குறித்தான விவரங்களை SBI வங்கி தற்போது அறிவித்துள்ளது. ஆன்லைன் முறையிலான விண்ணப்பமுறை ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in என்கிற அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மே 17 தான் கடைசி தேதி என்பதால் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே மாதம் முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – முழு பட்டியல் இதோ!

சிஸ்டம் அதிகாரி (வெப் டெவலப்பர்) பணிக்கு 1 காலிப்பணியிடமும், சிஸ்டம் அதிகாரி (செயல்திறன்/மூத்த ஆட்டோமேஷன் டெஸ்ட் இன்ஜினியர்) பணிக்கு 1 காலிப்பணியிடமும், கணினி அதிகாரி (திட்ட மேலாளர்) பணிக்கு 3 காலிப்பணியிடமும், நிர்வாக (சோதனை பொறியாளர்) பணிக்கு 10 காலிப்பணியிடமும், நிர்வாகி (இன்டராக்ஷன் டிசைனர்) பணிக்கு 3 காலிப்பணியிடமும், நிர்வாகி (வலை உருவாக்குநர்) பணிக்கு 1 காலிப்பணியிடமும், எக்ஸிகியூட்டிவ் (போர்ட்டல் அட்மினிஸ்ட்ரேட்டர்) பணிக்கு 3 காலிப்பணியிடமும், மூத்த நிர்வாகி (செயல்திறன்/ஆட்டோமேஷன் டெஸ்ட் இன்ஜினியர்) பணிக்கு 4 காலிப்பணியிடமும் உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், மூத்த நிர்வாகி (இன்டராக்ஷன் டிசைனர்) பணிக்கு 2 காலிப்பணியிடமும், மூத்த நிர்வாகி (திட்ட மேலாளர்) பணிக்கு 4 காலிப்பணியிடமும், மூத்த சிறப்பு நிர்வாகி (திட்ட மேலாளர்) பணிக்கு 1 காலிப்பணியிடமும், தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 1 காலிப்பணியிடமும், கணினி அதிகாரி (சோதனை பொறியாளர்) பணிக்கு 2 காலிப்பணியிடமும் என மொத்தமாக 36 காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும், இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூன் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தது 15 வருட அனுபவம் இருக்க வேண்டும். சிஸ்டம் ஆபீசர் பதவிக்கு ரூ.36,000 முதல் ரூ.89,890 வரை சம்பளமும், நிர்வாக பதவிகளுக்கு ரூ 15 முதல் 20 லட்சம் வரை சம்பளமும், மூத்த நிர்வாகிகளுக்கு ரூ 19 முதல் 24 லட்சம் வரை சம்பளமும், மூத்த சிறப்பு நிர்வாகிகளுக்கு ரூ 23 லட்சம் முதல் ரூ 27 லட்சம் வரை சம்பளமும் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!