SBI வங்கியின் இண்டர்நெட் பேங்கிங் செயல்பாடு – இன்று நிறுத்தம்!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) சில பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தனது ஆன்லைன் சேவைகளை இன்று (ஜூலை 10) நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இணைய சேவைகள் நிறுத்தம்
SBI வங்கியில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தனது இணைய வங்கி சேவைகளை இன்று (ஜூலை 10) நிறுத்துவதாக அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு வங்கி சேவைகள் செயல்படாது என SBI வங்கி அறிவித்துள்ளது. அதன் படி இந்த காலகட்டத்தில் இணைய வங்கி, யோனோ, யோனோ லைட், UPI உள்ளிட்ட சேவைகள் இயங்காது.
ஜூலை 15 முதல் 8 – 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மஹாராஷ்டிரா அரசு உத்தரவு!
இது குறித்து SBI வங்கியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள படி, ‘வாடிக்கையார்களுக்கு சிறந்த வங்கி சேவைகளை வழங்க முயற்சித்து வருவதால் இவ்வகையான சேவை நிறுத்தங்களை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன்படி வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக ஜூலை 10 ஆம் தேதி இரவு 10.45 மணி முதல் 11 ஆம் தேதி 12.15 வரை இணைய வங்கி, யோனோ, யோனோ லைட், UPI சேவைகள் நிறுத்தப்படும்.
TN Job “FB
Group” Join Now
இந்த குறிப்பிடப்பட்ட நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது. SBI வங்கியில் நிறுத்தப்படும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் ஸ்லாட் அல்லாத நேரமாக இருக்கும் போது, வாடிக்கையாளர்கள் 90 நிமிட கால இடைவெளிக்கு இணைய வங்கி சேவைகளைப் பயன்படுத்த முடியாது. SBI வங்கி நாடு முழுவதும் 22,000 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளையும், 57,889 க்கும் மேற்பட்ட ATM களையும் கொண்ட மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமாகும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ன் நிலவரப்படி, SBI வங்கி 85 மில்லியன் இணைய வங்கி மற்றும் 19 மில்லியன் மொபைல் வங்கி பயனர்களை கொண்டிருந்தது. UPI பயனர்களை பொருத்தளவு டிசம்பர் மாத இறுதியில் 135 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கடந்த வாரத்தில் கடன் வழங்குவது உட்பட பல்வேறு ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக SBI உட்பட 10 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது. இதில் SBI சுமார் 50 லட்ச ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.