SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு – 48 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு - 48 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு - 48 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு – 48 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் (SBI) காலியாக இருக்கும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை காணலாம்.

வேலை வாய்ப்புகள்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக SBI வங்கி அளித்துள்ள இணையதள தகவலின் படி, ‘SBI SCO 2022க்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 25 வரை திறந்திருக்கும். இதற்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி பழைய அட்டவணையிலேயே இயக்கம்!

இப்போது SBI SCO 2022 திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புக்கான தேர்வுத் தேதிகள், காலியிடங்கள், கல்வித் தகுதி, பணி அனுபவம், திறன்கள், தேர்வு செயல்முறை குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

தேர்வு தேதி:
  • ஆன்லைன் பதிவு தொடக்க தேதி – பிப்ரவரி 5, 2022
  • கடைசி தேதி – 25 பிப்ரவரி 2022
  • இதே தேதிக்குள் ஆன்லைன் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி தேதி – 12 மார்ச் 2022
  • அட்மிட் கார்டு மார்ச் 5, 2022 முதல் வழங்கப்படும்.
பதவி:
  • உதவி மேலாளர் (நெட்வொர்க் பாதுகாப்பு நிபுணர்) – 15
  • உதவி மேலாளர் (ரூட்டிங் & மாறுதல்) – 33
முக்கியமான சான்றிதழ்:
  • OBC பிரிவை சேர்ந்த பிரிவில் வரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பிரிவை குறிப்பிட வேண்டும்.
  • இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சாதிச் சான்றிதழை (SC/ST) சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதி:

உதவி மேலாளர் பணிக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:
  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும்.
  • எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.
  • நேர்முகத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட எழுத்துத்தேர்வில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அவசியம்.

இந்தியாவில் மேலும் 54 சீன செயலிகளுக்குத் தடை – மத்திய அரசு திட்டம்! லிஸ்ட் ரெடி!

  • ஒரு தவறான பதிலுக்கு 25% என்ற எதிர்மறை மதிப்பெண் பொருந்தும்.
  • விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணலுக்கு பதிலாக, குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படலாம்.
  • நேர்காணலுக்கு 25 மதிப்பெண்கள் இருக்கும்.
தேர்வு மையங்கள்:

குண்டூர், கர்னூல், விஜயவாடா, விசாகப்பட்டினம், கவுகாத்தி, சில்சார், முசாபர்பூர், பாட்னா, சண்டிகர் மொஹாலி, ராய்ப்பூர், பிலாஸ்பூர், புது டெல்லி, ஃபரிதாபாத், காசியாபாத், கிரேட்டர் நொய்டா, குருகிராம், பனாஜி, அகமதாபாத், வதோதரா, அம்பாலா, ஹிசார், ஹமிர்பூர், சிம்லா, ஜம்மு, ஜம்ஷெட்பூர், ராஞ்சி, பெங்களூரு, ஹூப்ளி, மங்களூர், கொச்சி, திருவனந்தபுரம், போபால், இந்தூர், அவுரங்காபாத், மும்பை, தானே, நாக்பூர், புனே, இம்பால், ஷிலாங், ஐஸ்வால், கோஹிமா, புவனேஷ்வர், சம்பல்பூர், புதுச்சேரி, ஜலந்தர், லூதியானா, ஜெய்ப்பூர், உதய்பூர், பர்தாங், காங்டாக், சென்னை, மதுரை, திருநெல்வேலி, ஹைதராபாத், வாரங்கல். அகர்தலா, பிரயாக்ராஜ் (அலகாபாத்), கான்பூர், லக்னோ, மீரட், வாரணாசி, டேராடூன், அசன்சோல், கிரேட்டர் கொல்கத்தா, சிலிகுரி ஆகிய இடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!