SBI வங்கியில் சேமிப்பு கணக்கு ஆன்லைனில் துவக்கம் – எளிய வழிமுறைகள் இதோ!

0
SBI வங்கியில் சேமிப்பு கணக்கு ஆன்லைனில் துவக்கம் - எளிய வழிமுறைகள் இதோ!
SBI வங்கியில் சேமிப்பு கணக்கு ஆன்லைனில் துவக்கம் - எளிய வழிமுறைகள் இதோ!
SBI வங்கியில் சேமிப்பு கணக்கு ஆன்லைனில் துவக்கம் – எளிய வழிமுறைகள் இதோ!

SBI வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு துவங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை தற்போது ஆன்லைன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான சில எளிய வழிமுறைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

சேமிப்பு கணக்கு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் சுமார் 9000 க்கும் மேற்பட்ட கிளைகள் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேவைகளை எளிதாக மேற்கொள்ளக்கூடிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இது தவிர SBI வங்கியின் புதிய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் வங்கி சேவைகளை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை எளிதாக்கியுள்ளது. அந்த வகையில் SBI வங்கியில் புதிய சேமிப்புக் கணக்கு துவங்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இப்போது ஆன்லைன் மூலம் செய்து கொள்ள முடியும்.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புதிய அப்டேட்! இனி கவலையில்லை!

அதற்கான சில எளிய வழிமுறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேமிப்பு கணக்கு துவங்குவதற்காக, KYC சரிபார்ப்புக்காக மட்டும் ஒரு முறை வங்கிக்குச் செல்ல வேண்டும். இந்த சேவைகள் கொரோனா நோய் தொற்று காலத்தில் வங்கியின் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் விதத்திலும், வங்கி சேவைகளை இடையூறு இல்லாமல் பெற்றுக்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் SBI வங்கியில் சேமிப்புக் கணக்கை ஆன்லைனில் துவங்குவதற்கு முதலாவதாக,

  • SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள் நுழையவும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் Accounts என்ற ஆப்ஷனின் கீழ் Saving Option Accountஎன்பதை கிளிக் செய்யவும்
  • அடுத்து, Apply Now என்பதை தேர்வு செய்யவும்
  • இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கப்படும்.
  • அதில் உங்கள் செயல்முறையைத் தொடர Apply Now விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
  • பின்னர் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP ஐ உருவாக்கவும்
  • இப்போது, உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிட்டு submit என்பதைக் கிளிக் செய்யவும்.

TN Job “FB  Group” Join Now

  • பின்னர் நீங்கள் அடுத்த பக்கத்திற்குச் செல்வீர்கள்.
  • அந்த செயல்முறைகளை துவங்க PAN விவரங்களை கொடுக்க வேண்டும்
  • அங்கு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் கொடுக்கப்பட்டுள்ள பிற தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், KYC செயல்முறையை முடிக்க விண்ணப்பதாரர்
  • ஒரு SBI வங்கியின் கிளைக்கு செல்ல வேண்டும்.
  • தொடர்ந்து விண்ணப்ப சரிபார்ப்பு செயல்முறையை வங்கி தொடங்கும்
  • சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் புதிய சேமிப்புக் கணக்கு 3 முதல் 5 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும்.

SBI வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்குவதற்கு தகுதியாக,

  • விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
  • சேமிப்புக் கணக்கிற்கு விண்ணப்பிக்கும் போது தனிநபர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர் மைனராக இருந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் சார்பாக கணக்கை திறக்கலாம்
  • விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சரியான அடையாள ஆவணம் மற்றும் முகவரி சான்றை வழங்க வேண்டும்
  • வங்கியின் ஒப்புதலைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர் ஆரம்ப வைப்புத் தொகையை செலுத்த வேண்டும்.
  • அவர் தேர்ந்தெடுத்த சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தேவையைப் பொறுத்து இவை மாறுபடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!