வங்கி துறையில் வேலை தேடுபவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,00,350/- வரை ஊதியம்..!

0
வங்கி துறையில் வேலை தேடுபவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1,00,350/- வரை ஊதியம்..!
வங்கி துறையில் வேலை தேடுபவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.1,00,350/- வரை ஊதியம்..!
வங்கி துறையில் வேலை தேடுபவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.1,00,350/- வரை ஊதியம்..!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Manager, AGM, Deputy Manager ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 32 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் எளிதில் புரியுமாறு இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் State Bank of India (SBI)
பணியின் பெயர் Manager, AGM, Deputy Manager
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பாரத ஸ்டேட் வங்கி காலிப்பணியிடங்கள்:

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) பின்வரும் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • AGM (IT- Tech Operations – 01
  • AGM (IT-Inbound Engineer) – 01
  • AGM (IT-Outbound Engineer) – 01
  • AGM (IT Security Expert) – 01
  • Manager (IT Security Expert) – 02
  • Deputy Manager (Network Engineer) – 10
  • Deputy Manager (Site Engineer Command Centre) – 10
  • Deputy Manager (Statistician) – 06
Manager, AGM, DM கல்வி தகுதி:

Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Statistics, Applied Statistics, Econometrics ஆகிய பாடப்பிரிவில் Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Manager, AGM பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Science & Engineering, Information Technology, Software Engineering, Electronics & Communications Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Manager, AGM, DM முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்கலாம். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Manager, AGM, DM வயது வரம்பு:

Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 38 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

AGM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Manager, AGM, DM ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.48,170/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,350/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

SBI தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

SBI விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

SC/ ST/ PWD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

SBI விண்ணப்பிக்கும் வழிமுறை:

மேற்கண்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (12.06.2022) விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SBI Notification Link

SBI Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!