ஓய்வு காலத்துக்கான சேமிப்புகள் – 6 புதிய திட்டங்கள் அறிமுகம்!

0
ஓய்வு காலத்துக்கான சேமிப்புகள் - 6 புதிய திட்டங்கள் அறிமுகம்!
ஓய்வு காலத்துக்கான சேமிப்புகள் - 6 புதிய திட்டங்கள் அறிமுகம்!
ஓய்வு காலத்துக்கான சேமிப்புகள் – 6 புதிய திட்டங்கள் அறிமுகம்!

ஒருவர் தன்னுடைய ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு அவர் பண ரீதியிலான விஷயத்தில் தனித்து இருப்பது அவசியம். அந்த வகையில் ஓய்வு காலத்துக்கான பணத்தை சிறந்த திட்டங்களில் சேமித்து வைப்பதன் மூலம் அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.

சேமிப்பு திட்டங்கள்

பொதுவாக நம் மக்களிடம் இல்லாத பழக்கங்களில் ஒன்று எதிர்காலத்துக்காக பணத்தை சேமித்து வைப்பது ஆகும். அதாவது ஒருவர் பணியில் இருக்கும் போதே குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து வைத்தால் அவை எதிர்காலத்துக்கு கைகொடுக்க கூடியதாக அமையும். அந்த வகையில் முதுமை வயதில் அமைதியான வாழ்க்கை வாழ ஒருவர் தனது எதிர்காலத்துக்கு தேவையான நிதியை சேமித்து வைப்பது சாலச்சிறந்ததாகும். அதன் படி மூத்த குடிமக்களுக்கு என சில சிறப்பு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்பட்டு வருகின்றன. அவைகள் குறித்த விரிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

இந்த திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஞ்சலகம் மற்றும் வங்கிகள் வழியாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேமிப்பு கணக்குகளை துவங்கலாம். இதில் குறைந்தபட்ச வைப்புதொகையாக 1000 ரூபாயும், அதிகபட்ச வைப்பு தொகையாக ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். இந்த சேமிப்பு கணக்குகளுக்கு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இவற்றில் டெபாசிட் செய்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே கணக்கை முடித்து கொண்டால், அதுவரை வழங்கப்பட்ட வட்டி தொகையானது டெபாசிட் தொகையில் இருந்து எடுக்கப்பட்டு, மீதி தொகை கைக்கு கிடைக்கும். இவற்றில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகையின் முதிர்ச்சிக்கு முன்னாக இறந்து விட்டால் அவர்களுக்கு உரிய வட்டியுடன் டெபாசிட் தொகை திரும்ப கொடுக்கப்படும்.

RBI சேமிப்பு பத்திரம்

இந்த சேமிப்பு திட்டமானது 7.15% பிளோட்டிங் வட்டி தரக்கூடியது. இவற்றின் குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாயாகவும், அதிகபட்ச முதலீடு வரம்பு என்று எதுவும் கொடுக்கப்படவில்லை. 7 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்தில் தனி நபர், கணவன் -மனைவி, கூட்டு குடும்பத்தினர் என அனைவரும் பயனடையலாம்.

ஆயுள் காப்பீட்டாளரின் வருடாந்திர திட்டங்கள்

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் கிடைக்கும். இதில் மொத்த முதலீடு செய்ததற்கு பிறகு, நிலையான வருமானம் தவறாமல் கிடைக்கும். பொதுவாக ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் ஓய்வூதிய திட்டமான வருடாந்தர திட்டத்தில் ஒருவர் நேரடியாக முதலீடு செய்தால், அவை எதிர்காலத்தில் மாதம், காலாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் செலுத்தப்படுகிறது.

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனம்

மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு தொகை அதாவது FD, உறுதிப்படுத்தப்பட்ட வருமானத்துடன் தற்போது சர்வோதயா சிறு நிதி வங்கி 7.75% அளவு வட்டி விகிதங்களை 5 வருட காலத்துக்கு வழங்குகிறது.

PPF

சிறந்த ஓய்வூதிய பலனாக வரி விலக்கு சேவைகளுடன் PPF மிகுந்த பயனளிக்கிறது. அதாவது குறைந்த கால கட்டத்தில் பெரிய அளவிலான தொகையை சேமித்து அதிக லாபத்தை பெற இந்த PPF உதவி புரிகிறது. இந்த திட்டம் 15 ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் 7.1% வட்டி கிடைக்கிறது.

தேசிய ஓய்வூதிய திட்டம்

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் மிக சிறந்த திட்டங்களில் ஒன்றாக இவை செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் ஒருவருக்கு 8 முதல் 10% வரையான வட்டி லாபம் கிடைக்கிறது. மேலும் வருமான வரிச்சட்டம் 80 C ன் கீழ் பயனர்களுக்கு வரிச்சலுகையும் கொடுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!