ரெட் லிஸ்டில் உள்ள நாடுகளுக்கு செல்ல தடை – சவூதி அரசு எச்சரிக்கை!

0
ரெட் லிஸ்டில் உள்ள நாடுகளுக்கு செல்ல தடை - சவூதி அரசு எச்சரிக்கை!
ரெட் லிஸ்டில் உள்ள நாடுகளுக்கு செல்ல தடை - சவூதி அரசு எச்சரிக்கை!
ரெட் லிஸ்டில் உள்ள நாடுகளுக்கு செல்ல தடை – சவூதி அரசு எச்சரிக்கை!

சவூதி அரசு தங்களது ரெட் லிஸ்ட் பட்டியலில் உள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டு, அங்கு பயணிக்க சவூதி நாட்டு மக்களுக்கு தடை விதித்துள்ளது. அரசின் உத்தரவை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரசின் எச்சரிக்கை:

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலை ஓய்ந்து சற்று இயல்பு நிலை திரும்புகின்ற சூழலில் மீண்டும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவ ஆரம்பித்து வரலாறு காணாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் எல்லையை மூட தொடங்கியது. அண்டை நாடுகளுடனான அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்துள்ளது.

கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.2,000 – குஜராத் அரசு அறிவிப்பு!

தங்கள் நாட்டினரையும் மற்ற நாடுகளுக்கு பயணிக்க தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மீண்டும் போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சவுதி நாட்டு அரசு தங்களின் ரெட் லிஸ்டில் உள்ள நாடுகளுக்கு தங்கள் நாட்டினர் பயணிக்க தடை விதித்துள்ளது. அரசின் தடையை மீறி பயணிப்பவர்கள் மேல் மூன்று ஆண்டு பயணத் தடை விதிக்கப்படும் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

சவூதி நாட்டின் ரெட் லிஸ்டில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரேசில், அமீரகம், எகிப்து போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளது. இத்தனையும் மீறி குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here