அண்ணா பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி சனிக்கிழமையும் வகுப்புகள்!

0
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி சனிக்கிழமையும் வகுப்புகள்!
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி சனிக்கிழமையும் வகுப்புகள்!
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி சனிக்கிழமையும் வகுப்புகள்!

தமிழக அண்ணா பல்கலை மாணவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தவறாமல் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை வகுப்புகள்:

தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்று தாக்கத்தால் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாகவே தினசரி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வு முறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து கொரோனா மூன்றாம் அலைக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.

தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு ஹாப்பி நியூஸ் – தனி படுக்கை வசதி!

முதலில் இறுதியாண்டு வகுப்பு, மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் செமஸ்டர் தேர்வுகளையும் நேரடி முறையில் (ஆப்லைன்) முறையில் நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கு மாணவர்கள் தரப்பில் இருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. தேர்வுக்கான பாடங்களை ஆன்லைனில் நடத்தி விட்டு தேர்வுகளை மட்டும் ஆப்லைனில் நடத்துவது நியாயமா என கேள்வி எழுப்பினர்.

அதனால் மீண்டும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாவே நடைபெற்று முடிந்தது. அடுத்த செமஸ்டர் தேர்வுக்கான வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலை மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெறும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வு நெருங்கும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள், ஜூன் 30 வரை நடத்தப்படும். இந்த சனிக்கிழமை வகுப்புகளில் மாணவர்கள் வருகை பதிவு குறையாமல் வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here