
விரைவில் சரவணன் மீனாட்சி சீசன் 4 அறிமுகம்? மீண்டும் ஜோடியாகும் ஆலியா & சஞ்சீவ்!
விஜய் தொலைக்காட்சியில் கூடிய விரைவில் சரவணன் மீனாட்சி சீசன் 4 சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் மூலமாக மீண்டும் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். இதனால், இந்த சீரியலை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
சரவணன் மீனாட்சி சீசன் 4:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலில் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கும்போதே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்கள். ஆலியா ராஜா ராணி சீரியலுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். பின்னர், பிரசவத்தின் காரணமாக ஆலியா ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார்.
Exams Daily Mobile App Download
பிரசவத்திற்கு பிறகு ஆலியா சீரியலில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சஞ்சீவும் ஷூட்டிங்கிற்கு சென்றுவிடுவதால் குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போதைக்கு சீரியல் எதுவும் வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும், ரசிகர்கள் தொடர்ந்து எப்போது சீரியலில் இணையப்போகிறீர்கள் என கேட்டபடி இருந்தனர். கூடிய விரைவில் சீரியலில் இணைய போவதாகவும் ஆலியா அறிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரையும் எப்போது ஒன்றாக சீரியலில் பார்க்கலாம் எனவும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் சேர்ந்து நடிக்கும் சீரியல் குறித்தான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீசன் 4 சீரியல் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த சீரியலில் ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் பலரும் சரவணன் மீனாட்சி சீசன் 4 சீரியலின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.