விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” செட்டில் புகுந்த மழை நீர் – வெளியான இன்ஸ்டா வீடியோ!
சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த வகையில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் வெள்ள நீர் வந்துள்ளதாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டார்ஸ்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் ஓடுகிறது. மேலும் பல முக்கிய சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இன்னும் மழை குறையாமல் இருப்பதால் சாலைகள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றனர்.
டிகிரி முடித்தவரா? – சென்னை Ericsson நிறுவன காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
என்ன தான் மழை பெய்தாலும் சீரியல்கள் வழக்கம் போல தங்களது படப்படிப்பை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் கடைசி தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரவண விக்ரம். இன்ஸ்ட்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மழையால் அவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Post Office சிறந்த சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.1,411 முதலீடு! ரூ.35 லட்சம் வரை ரிட்டன்ஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் டப்பிங் ஸ்டூடியோவில் அவர் ஆட்டோவில் வந்து இறங்க ஏரியா முழுவதும் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. மேலும் அவர் எப்படி இதில் போவது என தெரியாமல் இருக்க, தண்ணீரில் தான் போக வேண்டும் போல என சொல்லி முட்டி அளவு தண்ணீரில் அவர் நடந்து செல்கிறார். கடைசியாக மழை அது வேலையை செய்தாலும் நம்ம நம்மளுடைய வேலையை செய்ய வேண்டும் என சொல்லி அந்த வீடீயோவையோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.