நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக ‘சன்சத்’ டி.வி – பிரதமர் மோடி துவக்கி வைப்பு!

0
நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக 'சன்சத்' டி.வி - பிரதமர் மோடி துவக்கி வைப்பு!
நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக 'சன்சத்' டி.வி - பிரதமர் மோடி துவக்கி வைப்பு!
நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக ‘சன்சத்’ டி.வி – பிரதமர் மோடி துவக்கி வைப்பு!

நாட்டின் பாராளுமன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘சன்சத்’ டி.வி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சேனலில் பார்லிமென்ட் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் ஒளிபரப்பப்படும்.

புதிய சேனல்:

பாராளுமன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டது தான் அதற்கென்று தனியாக சேனல்கள். இதன் மூலம் மக்கள் எந்த வித ஒளிவு மறைவும் இன்றி அனைத்து விசயங்களையும் அறிந்து கொள்ள முடியும். இதேபோல், தமிழக சட்டசபையில் நடக்கும் நிகழ்வுகளையும் மக்கள் நேரலையில் காண்பதற்காக பிரத்யேகமாக சேனல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு தடை? அரசு பதிலளிக்க உத்தரவு!

இந்நிலையில், செப்டம்பர் 15ம் தேதியான இன்று பார்லிமென்ட் ஒளிபரப்புக்காக சன்சத் என்ற புதிய தொலைக்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். முன்னதாக பார்லி.லோக்சபா டி.வி. என்றும், ராஜ்யசபா டி.வி. என்றும் தனித்தனியாக இருந்தது. இவை இரண்டையும் இணைத்து ‘ சன்சத்’ டி.வி., என்ற பெயரில் துவக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த சேனலில் பார்லிமென்ட் நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள் , இந்தியா வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும், நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Velaivaippu Seithigal 2021

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here