‘பிக் பாஸ்’ வீட்டிற்கு சென்ற சஞ்சீவ் மனைவி வெளியிட்ட வீடியோ – தலையெழுத்து மாறுமா?
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 வில் வைல்டு கார்டு என்ட்ரியாக நடிகரும் விஜய்யின் தோழருமான சஞ்சீவ் வெங்கட் வந்திருக்கிறார். இந்த நிலையில் அவரின் மனைவி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழில் 5 வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் பாடகி இசைவாணி, சின்னத்திரை நடிகர் ராஜு, விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, சிபி, மாடல் மதுமிதா, ராப் சிங்கர் ஜக்கி, ஸ்ருதி, நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி என மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் வாரம்தோறும் எலிமினேஷன் பிராசஸ் நடைபெறும் இதில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய நிரூப்? வெளியான ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜா முதல் வீட்டிற்குள் வந்தார். பிறகு நடன இயக்குனர் அமீர் வந்தார். இவர்களை தொடர்ந்து நடிகரும், விஜய்யின் நெருங்கிய தோழருமான சஞ்சீவ் வெங்கட் வைல்டு கார்ட்டு எண்ட்ரியாக வந்துள்ளார். சினிமாவில் நிறைய துணை கதாபாத்திரத்தில் நடித்தவர். மேலும் சின்னத்திரையில் சீரியல்களும் நடித்திருக்கிறார். திருமதிசெல்வம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகும் ஆல்யா மனசா? அவரே அளித்த விளக்கம்!
இவர் தனது நடிப்பு திறனால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவக்கியுள்ளார். இந்தநிலையில் தற்போது வைல்டு கார்ட்டு எண்ட்ரியாக பிக்பாஸ் ஏரியாக உள்ளவே வந்துள்ள சஞ்சீவ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் பேசிய வீடியோ ஒன்றை அவரது மனைவி தற்போது வெளியிட்டுள்ளார். என்னிடம் பாசத்தை காட்டுபவர்கள் மீது நான் பாசத்தை காட்டுவேன். கோபத்தை வெளிக் காட்டுபவர்கள் மீது கோபத்தை வெளி காட்டுவேன். நான் ஒரு கண்ணாடி மாதிரி என்று கூறியுள்ளார். மேலும் அவரது மனைவி பிரீத்தி பேசிய வீடியோவில் வீட்டில் எப்படி என் கணவரை ரசிக்கிறேனோ அதே போன்று பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பார்த்து ரசிக்கிறேன். ஆனால் எப்படி தலையெழுத்து மாறப்போகிறது என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.