பிரசவ வலியால் துடித்த ஆலியா மானசா – ஆறுதல் கூறிய சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!

0
பிரசவ வலியால் துடித்த ஆலியா மானசா - ஆறுதல் கூறிய சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!
பிரசவ வலியால் துடித்த ஆலியா மானசா - ஆறுதல் கூறிய சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!
பிரசவ வலியால் துடித்த ஆலியா மானசா – ஆறுதல் கூறிய சஞ்சீவ்! வைரலாகும் வீடியோ!

பிரசவ அறைக்கு ஆலியா செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆலியா தற்போது அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தையை முதன்முறையாக சஞ்சீவ் வாங்கும் போது ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

பிரசவ அறையில் ஆலியா:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா எப்போதும் அவரது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தபடி இருக்கிறார். இந்நிலையில் தற்போது பிரசவ அறைக்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவை யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவுக்குள் நுழைந்த எக்ஸ்இ (XE) வகை கொரோனா – பீதியில் மக்கள்! ஒருவருக்கு தொற்று உறுதி!

அதாவது ஆலியாவிற்கு கொஞ்சமாக வலி வந்ததுமே மருத்துவமனைக்கு சென்று விட்டனர். ஆலியா மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே ஆலியாவின் குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்கு சென்றுவிட்டனர். பயமாக இருக்கிறதா என சஞ்சீவ்வும் அவ்வப்போது கேட்டபடி இருக்கிறார். இன்னும் இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகிறார். ஆனாலும் சுட்டி குழந்தை போலவே ஆலியா இருக்கிறார். இன்னும் சில மணி நேரத்தில் குழந்தையை பார்த்துவிடலாம் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

சிறிது நேரத்தில் ஆலியாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகமாகிறது. பின்பு ஆலியாவை பிரசவ அறைக்கு அழைத்து செல்கிறார்கள். பிரசவ அறைக்கு சென்ற சில மணி நேரத்திலேயே குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. முதன் முறையாக சஞ்சீவ் தான் குழந்தையை கையில் வாங்குகிறார். குழந்தையை கையில் வாங்கியதுமே அவரையே அறியாமல் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். அதற்கு பிறகு ஆலியாவிடம் குழந்தையை காட்டுகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!