கருப்பு நிற பென்ஸ் வாங்க கருப்பு உடையில் வந்த சஞ்சீவ், ஆலியா குடும்பம் – வைரலாகும் வீடியோ!

0
கருப்பு நிற பென்ஸ் வாங்க கருப்பு உடையில் வந்த சஞ்சீவ், ஆலியா குடும்பம் - வைரலாகும் வீடியோ!
கருப்பு நிற பென்ஸ் வாங்க கருப்பு உடையில் வந்த சஞ்சீவ், ஆலியா குடும்பம் - வைரலாகும் வீடியோ!
கருப்பு நிற பென்ஸ் வாங்க கருப்பு உடையில் வந்த சஞ்சீவ், ஆலியா குடும்பம் – வைரலாகும் வீடியோ!

சின்னத்திரையில் ட்ரெண்டிங் ஜோடி லிஸ்டில் இருக்கும் நடிகை ஆலியா மனசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது மகனிற்கு பரிசளித்த கார் வாங்க குடும்பத்துடன் கருப்பு உடையில் சென்ற வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆலியா மானசா சஞ்சீவ்:

சின்னத்திரையில் ஒன்றாக நடித்து அதன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஏரளாமானோர் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சஞ்சீவ் ஆலியா ஜோடி. இருவக்கும் திருமணம் முடிந்து ஐலா என்ற மகள் இருக்கிறாள். வெவ்வேறு சேனலில் டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்களில் இருவரும் நடித்து வருகின்றனர். ஆனால் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதால் தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

Instagram பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 7 புதிய அம்சங்கள் அறிமுகம்!

மேலும் சஞ்சீவ் நடிக்கும் சீரியல் தமிழ் சின்னத்திரையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஆலியாவிற்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அது பற்றிய பதிவு ஒன்றை சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே தனது மகள் பிறப்பதற்கு முன் வெள்ளை நிற பென்ஸ் கார் சஞ்சீவ் பரிசளித்த நிலையில் தன்னுடைய மகனிற்காக கருப்பு நிற பென்ஸ் கார் பரிசளித்து இருக்கிறார். மேலும் குடும்பத்துடன் கருப்பு உடையில் சென்று கார் வாங்கி இருக்கிறார்.

விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ஷபானா – வெளியான ப்ரோமோ!

அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. மேலும் இந்த வீடியோவில் ஐலா பாப்பா செய்யும் சேட்டைகளை பார்த்து ஏகப்பட்டோர் லைக்குகளை குவித்து வருகின்றனர். சஞ்சீவ் தனது வீட்டில் சந்தோஷமான நிகழ்ச்சி என்றால் கார் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் அவருடைய கார் கலெக்சன்ஸ் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. கருப்பு தான் எனக்கு புடிச்ச கலர் என பதிவிட்டு அந்த வீடியோவில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என காட்டி இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!