தமிழகத்தில் எகிறும் முகக்கவசம், சானிடைசர் விலை – கட்டுப்படுத்த கோரிக்கை!

0
தமிழகத்தில் எகிறும் முகக்கவசம், சானிடைசர் விலை - கட்டுப்படுத்த கோரிக்கை!
தமிழகத்தில் எகிறும் முகக்கவசம், சானிடைசர் விலை - கட்டுப்படுத்த கோரிக்கை!

தமிழகத்தில் எகிறும் முகக்கவசம், சானிடைசர் விலை – கட்டுப்படுத்த கோரிக்கை!

கொரோனா தீவிரமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு உபகரணங்கள் விலையை நிர்ணயித்து அறிவிப்பை வெளியிட்டது. தற்போது அவற்றின் விலை அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

கொரோனா தடுப்பு உபகரணங்கள்:

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியது. முதல் மற்றும் இரண்டாம் அலை என மாறி மாறி நோய்த்தொற்று பரவி வந்த நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு வெளியே செல்லும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டது.

மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்கள் விலை திடீரென உயர்ந்தது. தமிழக அரசு மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான விலையை நிர்ணயித்தது. அதன்படி N95 மாஸ்கை ரூ.22-க்கும், சர்ஜிக்கல் மாஸ்க் ரூ.5க்கும் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது. தொடக்கத்தில் மருந்தகங்களில் இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு பின்பு விலை உயர்த்தப்பட்டது. இருப்பினும் தற்போது வரை மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு SETC இல் 1,800 காலிப்பணியிடங்கள் – அமைச்சர் பேட்டி!

இதனை தொடர்ந்து தற்போது என்.95 மாஸ்க்கின் விலை ரூ.22-லிருந்து 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ரூ.44 இருந்து 100 வரையில் அந்த மாஸ்க்கை தற்போது விற்பனை செய்கிறார்கள். சர்ஜிக்கல் மாஸ்க்கின் விலை ரூ.10 ஆக அதிகரித்துள்ளது. சானிடைசர்கள் விலை ரூ.110-ல் இருந்து உயர்ந்து ரூ.150 முதல் 200 வரை (200 மி.லி) அதனை விற்பனை செய்கிறார்கள். அதன் காரணமாக தமிழக அரசு அதன் விலையை நிர்ணயித்து அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!