பார்வதியை கடத்தியவரை கண்டுபிடிக்கும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ சீரியல் அடுத்த டிவிஸ்ட்!

0
பார்வதியை கடத்தியவரை கண்டுபிடிக்கும் சந்தியா - 'ராஜா ராணி 2' சீரியல் அடுத்த டிவிஸ்ட்!
பார்வதியை கடத்தியவரை கண்டுபிடிக்கும் சந்தியா - 'ராஜா ராணி 2' சீரியல் அடுத்த டிவிஸ்ட்!
பார்வதியை கடத்தியவரை கண்டுபிடிக்கும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ சீரியல் அடுத்த டிவிஸ்ட்!

விஜய் டிவியின் ராஜா ராணி 2 தற்போது மிகவும் பரபரப்பான கதையாக சென்று வருகிறது. சந்தியாவின் போலீஸ் கனவிற்கு ஏற்ற வகையில், வீட்டில் நடக்கும் சம்பவங்கள் அமைந்து வருகிறது. இதனால் போக போக கதையில் கூடுதலாக பல திருப்பங்கள் வர வாய்ப்புள்ளது.

ராஜா ராணி 2:

ராஜா ராணி 2 சீரியலில் படிக்காத சரவணனை படித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் உள்ள சந்தியா கல்யாணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கான புரிதல் ஆரம்ப நாட்களில் குறைவாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு உறுதுணையாக செயல்பட ஆரம்பித்தனர். தன் கணவர் சரணவனனுக்கு சமையல் மட்டுமே நன்றாக தெரியும் என்பதால், அதில் அவரது திறமையை வெளி உலகிற்கு காட்ட நினைத்து சமையல் போட்டியில் சந்தியா கலந்து கொள்ள வைத்தார்.

Exams Daily Mobile App Download

அதில் வந்த பல தடைகளையும் தாண்டி சரவணன் போட்டியில் முதல் பரிசை வென்றார். இதேபோல் சந்தியாவின் போலீஸ் கனவை தாமதமாக தெரிந்து கொண்ட சரவணன், எத்தனை தடைகள் வந்தாலும், சந்தியா கண்டிப்பாக அவரது கனவை அடைய வேண்டும் என்று துணையாக இருக்கிறார். இந்நிலையில் சரவணன் தங்கை பார்வதியின் கல்யாணம் பல தடைகளையும், அர்ச்சனாவின் சதி திட்டத்தையும் தாண்டி வெற்றிகரமாக சந்தியா நடத்தி முடித்தார்.

பாக்கியா உங்கள் மனைவி தானா? உண்மையை கண்டுபிடித்த ராதிகா! உறைந்துபோன கோபி!

கல்யாணம் முடிந்த பிறகு, பார்வதி காணாமல் போய் விடுகிறார். அவரை யாரோ கடத்தி வைத்திருக்கிறார்கள். இதை பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. வீட்டில் சோதனை நடத்தியதில் சரவணன் சட்டை பையில் ஒரு பெண் டிரைவ் கிடைக்கிறது. அதில் கோயில் கோபுரத்தின் மற்றும் பார்வதியின் புகைப்படம் இருக்கிறது. அதேபோல் செல்வா பார்வதி கோயிலுக்கு வரவில்லை என்று சொல்லுகிறார். ஆனால் கோயிலில் பார்வதியின் கர்சீஃப் கிடைக்கிறது. இதனால் செல்வா தான் பார்வதியை கடத்திய தீவிரவாத கும்பலாக இருக்க வேண்டும் என்று சந்தியாவிற்கு சந்தேகம் வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here