கார் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கிய சமந்தா, விஜய் – குஷி படப்பிடிப்பில் விபரீதம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
கார் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கிய சமந்தா, விஜய் - குஷி படப்பிடிப்பில் விபரீதம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
கார் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கிய சமந்தா, விஜய் - குஷி படப்பிடிப்பில் விபரீதம்! ரசிகர்கள் அதிர்ச்சி!
கார் விபத்தில் சிக்கி நீரில் மூழ்கிய சமந்தா, விஜய் – குஷி படப்பிடிப்பில் விபரீதம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடித்து வரும் புது படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நீரில் மூழ்கிய சமந்தா:

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் முதலில் தனது சினிமா பயணத்தை 500 ருபாய் சம்பளத்துடன் மாடலிங் துறையில் தொடங்கினார். அதன் பிறகு 2010 இல் கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு காதல் திரைப்படமான ஏ மாயா சேசவே மூலம் தனது நடிப்பை தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகம் செய்தார். அந்த திரைப்படம் அவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான ஃபிலிம்பேர் & நந்தி விருதையும் பெற்றுத் தந்தது.

Exams Daily Mobile App Download

இதை தொடர்ந்து தமிழ் சினிமா துறைக்கு அடி எடுத்து வைத்த சமந்தா முதலில் பானா காத்தாடி படத்தில் நடித்ததை அடுத்து தொடர்ந்து பல தமிழ் படங்களில் பிரபல நடிகர்களுடன் இணைந்து பிரபலமானார். தற்போது அதிக ரசிகர் பெருமக்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாகவும் வலம் வருகிறார். இதற்கு எல்லாம் காரணம் சமந்தாவின் ஓயாத உழைப்பு தான். சொந்த வாழ்க்கையில் இவருக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் அதையே நினைத்து துவண்டு போகாமல் தனது கெரியரில் உச்சத்தில் உள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் மீண்டும் மகிழ்ச்சி – தாய்மையடையும் முல்லை!

இந்நிலையில் தற்போது அவர் கமிட் ஆகியிருக்கும் குஷி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்திற்கான ஆக்சன் காட்சிகள் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் படமாக்கப்பட்டது. அப்போது ஆற்றின் அருகே எடுக்கப்பட்ட ஒரு காட்சியின் போது திடீரென எதிர்பாரா விதமாக வாகனத்தில் இருந்து இருவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கினர். இதைப்பார்த்து பதறிப்போன படக்குழு உடனடியாக இருவரையும் மீட்டு முதலுதவி அளித்தார்கள். இதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் அதிர்ச்சியில் இருந்த நிலையில் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here