விவாகரத்திற்கு பின் ஜூனியர் NTR உடன் இணையும் சமந்தா – டிவி ஷோவில் தசரா ஸ்பெஷல்!

0
விவாகரத்திற்கு பின் ஜூனியர் NTR உடன் இணையும் சமந்தா - டிவி ஷோவில் தசரா ஸ்பெஷல்!
விவாகரத்திற்கு பின் ஜூனியர் NTR உடன் இணையும் சமந்தா - டிவி ஷோவில் தசரா ஸ்பெஷல்!
விவாகரத்திற்கு பின் ஜூனியர் NTR உடன் இணையும் சமந்தா – டிவி ஷோவில் தசரா ஸ்பெஷல்!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக புகழ் பெற்றவர் நடிகை சமந்தா. அவர் தனது கணவரை விவாகரத்து செய்த பின் முதன் முதலில், ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கும் ‘எவரு மிலோ கோடிஸ்வரலு’ (கோன் பனேகா குரோர்பதி – தெலுங்கு அத்தியாயம்) என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா:

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக புகழின் உச்சியில் இருப்பவர் நடிகை சமந்தா. அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று (அக்.7) அவர்களுக்கு நான்காவது திருமண நாள். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து வாங்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. மேலும் இது குறித்து இருவர் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ராதிகாவின் கர்ப்பகால புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!

அதனால் நாளுக்கு நாள் வதந்திகள் பரவியது. அதனால் அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருவரும் பிரிய இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம் என சமந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பை பெற்றிருந்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம், அது எங்கள் உறவின் முக்கிய அம்சமாக இருந்தது. எப்போதும் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பு பிணைப்பை வைத்திருக்கும் என நம்புகிறோம். மேலும் எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்கான பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும் என பதிவிட்டனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யாவுடன் பிரியாணி சாப்பிட சென்ற கண்ணன் – வெளியான வீடியோ!

இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கும் எவரு மிலோ கோடிஸ்வரலு (கோன் பனேகா குரோர்பதி – தெலுங்கு அத்தியாயம்) என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா கலந்து கொள்ளும் இந்த சிறப்பு நிகழ்ச்சி தசரா திருநாளின் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னதாக அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்ற ஷூட்டிங்கில் அவர் கலந்து கொண்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டிருந்தாலும், விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு தற்போது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here